விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்க்கு நாசா கொடுக்கும் சம்பளம் எவ்வளவு?
இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்க்கு நாசா கொடுக்கும் சம்பளம் எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சுனிதா வில்லியம்ஸ்க்கு சிக்கல்
கடந்த ஜூன் மாதம் 5 -ம் திகதி, போயிங் ஸ்டார்லைனர் (Boeing's Starliner spacecraft) ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு (International Space Station) சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து புறப்பபட்டனர்.
இருவரும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஜூன் 6 -ம் திகதி சென்றடைந்தனர். அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து பணிகளை மேற்கொள்வார்கள் என நாசா அறிவித்தது.
ஆனால், போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சுனிதா வில்லியம்ஸ்க்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தான் பூமிக்கு திரும்புவார் என்றும் நாசா அறிவித்தது.
சம்பளம் எவ்வளவு?
இந்நிலையில், விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் சம்பள விவரங்கள் வெளிவந்துள்ளது. நாசாவின் அறிக்கைகளின்படி, விண்வெளி வீரர்களுக்கு ஆண்டுக்கு 152,258 அமெரிக்க டொலர்கள் ஊதியமாக வழங்குகின்றனர்.
அதாவது இந்திய மதிப்பில் 1 கோடியே 26 லட்சத்து 38 ஆயிரத்து 434 ரூபாய் என கூறப்படுகிறது. இதனை தெரிந்து கொண்ட நெட்டிசன்கள், முன்னணி தனியார் நிறுவன நிர்வாகிகளே ஆண்டுக்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கும் நிலையில் உயிரை பணயம் வைத்து வேலை செய்பவர்களுக்கு இவ்வளவு தானா என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |