உங்கள் பெயரை நிலவிற்கு அனுப்ப வேண்டுமா? நாசா வழங்கும் வாய்ப்பு
நிலவிற்கு உங்கள் பெயரை அனுப்புவதற்கான வாய்ப்பை நாசா வழங்கியுள்ளது.
நிலவிற்கு செல்லும் பெயர்
விண்வெளிக்கு செல்ல ஆசை அனைவருக்கும் இருந்தாலும், அது வெகு சில விண்வெளி வீரர்களுக்கு மட்டுமே சாத்தியமாகி இருந்தது.
தற்போது, Space X, Blue Origin போன்ற நிறுவனங்கள் மனிதர்களை விண்வெளி சுற்றுலாவிற்கு அழைத்து சென்று வருகிறது.
ஆனால், இதற்கான கட்டணங்களின் தொடக்க விலையே சில கோடிகள் இருக்கும் என்பதால், சாமானிய மனிதர்களுக்கு சாத்தியமற்றது.
ஆனால், இலவசமாக உங்கள் பெயரை விண்வெளிக்கு கொண்டு செல்லும் வாய்ப்பை அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வழங்குகிறது.
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ஆர்ட்டிமிஸ் 2 (Artemis II) திட்டத்தின் கீழ், ஓரியன் விண்கலம் நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்ட உள்ளது.
4 விண்வெளி வீரர்கள் இந்த விண்கலத்தில் பயணித்து, 10 நாட்களுக்கு நிலவை சுற்றி ஆய்வு செய்து, பின்னர் பூமிக்கு திரும்ப உள்ளனர்.
எப்படி செய்வது?
இந்நிலையில், "Send Your Name with Artemis II" என்ற பிரச்சாரத்தினை நாசா தொடங்கியுள்ளது.
Artemis II is launching in early 2026. You coming with?
— NASA (@NASA) September 9, 2025
Now you can. Submissions are open to fly your name around the Moon.
Your name will be recorded on a memory card that will be stowed inside the Orion spacecraft. Sign up here: https://t.co/5nu5GdtPvo pic.twitter.com/ZvB1Mf4oL5
இதன்படி, இந்த விண்வெளி பயணத்தின் போது ஒரு மெமரி கார்டு கொண்டு செல்லபட உள்ளது. இந்த மெமரி கார்டில் உங்கள் பெயரை இடம் பெற செய்யலாம்.
இதற்கு நாசாவின் இணையதளத்திற்கு சென்று, உங்கள் பெயரை உள்ளிட்ட வேண்டும். மற்றும் 4 முதல் 7 இலக்க கடவுசொல் ஒன்றை உள்ளிட்டு Submit என்பதை தேர்வு செய்யவேண்டும்.
பெயரை பதிவு செய்ய: https://www3.nasa.gov/send-your-name-with-artemis
அதன் பின்னர், உங்கள் பெயர் அந்த மெமரி கார்டில் சேமிக்கப்படும். அதற்காக போர்டிங் பாஸ் ஒன்றையும் நாசா வழங்குகிறது.
21 ஜனவரி 2026 வரை இந்த பெயரை பதிவு செய்ய நாசா வாய்ப்பு வழங்குகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |