மனித உடல் எச்சங்களுடன் கிடந்த 45 பைகள்: மெக்சிகோவில் பெரும் பரபரப்பு
மனித உடல்கள் அடைக்கப்பட்ட 45 பைகள் மெக்சிகோவில் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனித உடல் எச்சங்கள் அடைக்கப்பட்ட 45 பைகள்
மெக்கோவின் மேற்கு மாகாணமான ஜாலிஸ்கோவில்(Jalisco) உள்ள பள்ளத்தாக்கில் மனித உடல் எச்சங்கள் அடைக்கப்பட்ட 45 பைகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட 45 பைகளில் ஆண், பெண் ஆகிய இருவர்களது மனித உடல் பாகங்களும் இருந்ததாக அரசு வழக்கறிஞர் அலுவலகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
AFP
செவ்வாய்கிழமை தொழில்துறை மையமான குவாடலஜாராவின்(Guadalajara) புறநகர் பகுதியான ஐபோபன்(Zapopan) நகராட்சியில் உள்ள 40 மீட்டர் பள்ளத்தாக்கில் இந்த பயங்கரமான கண்டுபிடிப்பு செய்யப்பட்டுள்ளது.
காணாமல் போன இளைஞர்கள்
கடந்த மே மாதம் 20 திகதி காணாமல் போன 30 வயதிற்குட்பட்ட 2 பெண்கள் மற்றும் 5 ஆண்களை தேடும் போது மனித உடல்கள் அடைக்கப்பட்ட 45 பைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன அனைவர் குறித்து பொலிஸாருக்கு தனித்தனியாக புகார்கள் வந்துள்ளது, ஆனால் காணாமல் போன 7 பேரும் ஒரே கால் சென்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் என்பது விசாரணையில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
AFP
மேலும் கால் சென்டர் நிறுவனம் அமைந்துள்ள அதே பகுதியில் தான் மனித உடல் பாக எச்சங்கள் அடைக்கப்பட்ட 45 பைகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் தடயவியல் நிபுணர்கள் இன்னும் உடல் பாகங்கள் யாருடையது என்பதை உறுதிப்படுத்தவில்லை.
ஆனால் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் கால் சென்டர் நிறுவனம் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வரலாம் என தெரியவந்துள்ளது.