நைஜீரியாவில் பயங்கர எரிபொருள் டேங்கர் விபத்து: 48 மனிதர்கள், 50 கால்நடைகள் உயிரிழப்பு
நைஜீரியாவில் எரிபொருள் டேங்கர் விபத்தில் 48 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
டேங்கர் விபத்து
செப்டம்பர் 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நைஜீரியாவின் நைஜர்(Niger) மாநிலத்தில் உள்ள ஆகே (Agaie)பகுதியில் எரிபொருள் டேங்கர் லொறி ஒன்று மற்றொரு லொறியுடன் நேருக்கு நேர் மோதியதில் பயங்கர வெடிப்பு விபத்து ஏற்பட்டது.
இரண்டு லொறிகள் மோதிக்கொண்ட விபத்தில் 48 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக நைஜர் மாநில அவசர மேலாண்மை முகமையின் இயக்குநர் ஜெனரல் அப்துல்லாஹி பாபா-அராப் கூறுகையில், விபத்தின் போது எரிபொருள் டேங்கர் கால்நடைகளையும் ஏற்றிச் சென்று வந்ததாக தெரிவித்தார்.
பலியான கால்நடைகள்
இதனால் குறைந்தது 50 கால்நடைகள் உயிருடன் எரிந்து சாம்பலானதாகவும் அவர் கூறினார்.
விபத்து நடந்த இடத்தில் மீட்பு நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
விபத்துக்கான காரணத்தை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |