மனிதர்கள் கரடி போல் உடையணிந்து ஏமாற்றுவதாக எழுந்த சர்ச்சை: போட்டி போட்டுக்கொண்டு விளக்கமளித்துள்ள நிபுணர்கள்
சீனாவில் உயிரியல் பூங்கா ஒன்றில் கரடி ஒன்று மனிதர்கள் போல் இரண்டு கால்களில் நின்றபடி மனிதர்களைப் பார்த்து கையசைக்கும் காட்சிகள் தலைப்புச் செய்தியாகின. கூடவே, ஒரு சர்ச்சையும் உருவாகியது.
மனிதர்கள் கரடி போல் உடையணிந்து ஏமாற்றுவதாக எழுந்த சர்ச்சை
ஆம், இரண்டு கால்களில் நிற்கும் அந்தக் கரடி, கரடியே அல்ல. மனிதர்கள் கரடி போல் உடை அணிந்து ஏமாற்றுகிறார்கள் என சமூக ஊடகங்களில் செய்திகள் பரவத் துவங்கின.
Credit: Twitter
குறிப்பாக, அந்த கரடி எழுந்து நிற்கும்போது, அதன் பின்பக்கமிருக்கும் தோல், உடை போல சுருங்க, அது உடைதான், ஆக, மனிதர்கள்தான் கரடி போல உடை அணிந்து ஏமாற்றுகிறார்கள் என்பதற்கு அதுவே ஆதாரம் என குரல்கள் ஒலிக்கத் துவங்கின.
போட்டி போட்டுக்கொண்டு விளக்கமளித்துள்ள நிபுணர்கள்
இந்த சர்ச்சை எழுந்ததுமே, வன விலங்குகள் துறை சார் நிபுணர்கள், அந்த கரடிகள் ஏன் அப்படி நிற்கின்றன என்பதற்கு போட்டி போட்டுக் கொண்டு விளக்கமளிக்க முன்வந்துள்ளனர்.
சர்ச்சைக்குரிய அந்த கரடி Sun bear வகையைச் சேர்ந்த கரடி ஆகும். அதன் பெயர் ஏஞ்சலா (Angela). ஆக, ஏஞ்சலா ஒரு கரடி என்பதில் சந்தேகமேயில்லை என்று கூறும் மலேசிய வன உயிர்கள் துறை சார் உயிரியலாளரான Dr Wong Siew Te, ஏஞ்சலா குறித்து எழுந்த சர்ச்சையைக் கண்டு எனக்கு அழுவதா சிரிப்பதா என்றே புரியவில்லை என்று கூறியுள்ளார்.
இந்த Sun bear வகையைச் சேர்ந்த கரடிகள், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள ஆர்வம் காட்டும் கரடிகளாம். குறிப்பாக, உயிரியல் பூங்கா ஒன்றில் சுற்றிலும் மனிதர்கள் நிற்க, அவர்களுடைய கவனத்தை ஈர்ப்பதற்காக அவை எழுந்து நின்று கைகளை அசைக்குமாம்.
அதாவது, அந்த குறிப்பிட்ட சீன உயிரியல் பூங்காவில், விலங்குகளுக்கு உணவளிக்க பார்வையாளர்களுக்கு அனுமதி உள்ளது. அப்படிப்பட்ட சூழலில், இந்த கரடிகள் எழுந்து நின்று கையசைக்கும்போது உற்சாகமடையும் பார்வையாளர்கள் அவற்றிற்கு உணவளிக்க, இப்படிச் செய்தால் நமக்கு உணவு கிடைக்கும் என்பதைக் கற்றுக்கொள்ளும் கரடிகள், உணவுக்காக மக்களுடைய கவனத்தை ஈர்ப்பதற்காக இப்படி எழுந்துநின்று கையசைக்கத் துவங்கின்றனவாம்.
அதேபோல, Chester உயிரியல் பூங்காவைச் சேர்ந்த Dr Ashleigh Marshall என்பவரும், நிச்சயம் ஏஞ்சலா ஒரு கரடிதான் என்றும், அதன் பின்பக்கத்தில் அப்படி தோல் சுருங்கிக் காணப்படுவதே, தன்னை எதிர்க்கும் விலங்குகளுடன் எளிதாக திரும்பி போராடுவதற்காகத்தான் என்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |