சுற்றுலாவுக்கு சென்ற காதல் தம்பதி…மனைவியை உயிருடன் தின்ற சுறா மீன்: கதிகலங்கிய கணவன்
அமெரிக்காவை சேர்ந்த தம்பதியினர் ஒருவர் ஹவாயில் ஸ்நோர்கெல்லிங் செய்து கொண்டு இருந்த போது, மனைவி சுறா மீனின் வாயில் சிக்கி உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரை திரும்பிய கணவன்
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தை சேர்ந்த பெயர் வெளியிடப்படாத தம்பதியினர் ஒருவர், டிசம்பர் 8ம் திகதி ஹவாய் தீவான மௌய்யில் ஸ்நோர்கெல்லிங் செய்து கொண்டிருந்தார்.
கடற்கரையில் உள்ள கெவாகாபு முனையிலிருந்து 50 கெஜம் தொலைவில் ஜோடியாக ஸ்நோர்கெல்லிங் செய்து கொண்டு இருந்த கணவன், மனைவியின் அருகில் சுறா மீன் ஒன்று வருவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
Getty
சிறிது நேரம் கடலுக்குள் இருந்த படியே மனைவியைத் தேடிய கணவன், சுறா மீன் வாயில் ஏதோ இருப்பதையும், சுறாவின் செவுள்களைச் சுற்றி சிவப்பு நிறத்தையும் கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக கரைக்கு திரும்பியுள்ளார்.
கரைக்கு திரும்பி வந்தும் மனைவியை பார்க்க முடியாததை அடுத்து, அவசர சேவையான 911க்கு அழைப்பு விடுத்தார்.
சுறா மீனின் வாயில் சிக்கிய மனைவி
இதையடுத்து தேடுதல் வேட்டை நடத்திய ஹவாய் அதிகாரிகள், சுறாவின் வாயில் சிக்கியது 911க்கு அழைப்பு விடுத்த அமெரிக்க சுற்றுலா பயணியின் மனைவி என்று உறுதிப்படுத்தினார்கள்.
NBC
40 மணி நேரத்தில் 17 தேடுதல் முயற்சிகளுக்குப் பிறகு, 306 மைல் சுற்றளவு கடலில் வேட்டை நிறுத்தப்பட்டது. இதில் ஸ்நோர்கெல் செட் மற்றும் குளியல் ஆடையின் ஒரு பகுதி கண்டுபிடிக்கப்பட்டது என்று ஹவாய் நியூஸ் தகவல் தெரியவந்துள்ளது.
சுறா ஒரு புலி சுறா என்று சாட்சிகள் தெரிவித்தனர், சிலர் இது தோராயமாக 10 அடி முதல் 12 அடி வரை இருக்கும் என்று மதிப்பிடுகின்றனர்.
WRAL