உக்ரைனுக்கு ரூ.30000 கோடி கடன் தர IMF ஒப்புதல்
உக்ரைனுக்கு 900 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தர IMF ஒப்புதல் அளித்துள்ளது.
ரஷ்யாவுடனான போருக்கு மத்தியில் அதிகரித்துவரும் பொருளாதார சிக்கல்களை சமாளிக்க, சர்வதேச நாணய நிதியம் (IMF) உக்ரைனுக்கு 900 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 30000 கோடி) கடனை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
IMF தலைவர் Kristalina Georgieva உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyஐ சந்திப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
Georgieva ஜெலென்ஸ்கியை வாஷிங்டனில் உள்ள IMF தலைமையகத்தில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் சந்தித்து, IMF-ன் நிர்வாகக் குழு உக்ரைனுக்கு ஆதரவளிப்பதில் ஒருமனதாக இருப்பதாகக் கூறினார்.
போர் தொடர்பான நிச்சயமற்ற நிலைமைகளுக்கு மத்தியில் இந்த கடன் குறிப்பிடத்தக்க உதவியாக கிடைத்துள்ளது. இந்த நிதியுதவி 15.6 பில்லியன் டொலர் கடன் திட்டத்தின் ஒரு பகுதியாக வருகிறது.
நிதி அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, போர் தொடங்கியதில் இருந்து உக்ரைன் $68.5 பில்லியனுக்கும் அதிகமான பட்ஜெட் ஆதரவைப் பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
International Monetary Fund, 900 million US Dollars, Ukraine, IMF chief Kristalina Georgieva, Ukrainian President Volodymyr Zelenskiy