களத்தில் அசத்தும் ரிங்கு சிங்: 4வது டி20-யில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இலக்கை நிர்ணயித்த இந்தியா
இந்தியா- அவுஸ்திரேலியா இடையிலான 4வது டி20 போட்டி ராஜ்பூர் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதல் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் 37 ஓட்டங்களும், ருதுராஜ் 32 ஓட்டங்களும் குவித்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.
Nerves of ?????: ????? ????? ?#OneFamily #INDvAUSpic.twitter.com/cBIqz0VfgZ
— Mumbai Indians (@mipaltan) November 23, 2023
ஆனால் பின்னர் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் சொற்ப ஓட்டங்களில் வெளியேறி அதிர்ச்சி தந்தனர்.
இருப்பினும் களத்தில் ஒன்று சேர்ந்த ரிங்கு சிங் மற்றும் ஜிதேஷ் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரிங்கு சிங் 29 பந்துகளில் 46 ஓட்டங்களும், ஜிதேஷ் சர்மா 19 பந்துகளில் 35 ஓட்டங்களும் குவித்து அசத்தினர்.
இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்கள் குவித்தது.
First ball of his spell and Ravi Bishnoi strikes ⚡️?
— BCCI (@BCCI) December 1, 2023
He removes Josh Philippe for 8.
Follow the Match ▶️ https://t.co/iGmZmBsSDt#TeamIndia | #INDvAUS | @IDFCFIRSTBank pic.twitter.com/ccQxDKoeiw
வெற்றி பெற்ற இந்தியா
இதையடுத்து இரண்டாவது பேட்டிங்கில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் 31 ஓட்டங்கள் சேர்த்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
இருப்பினும் அடுத்தடுத்து வந்த முன்னணி வீரர்கள் சீரான முறையில் ஓட்டங்களை குவிக்க தவறியதால் அவுஸ்திரேலிய அணி மிகவும் தடுமாறியது.
இறுதியில் கேப்டன் மேத்யூ வேட் விக்கெட்டை பறிகொடுக்காமல் 23 பந்துகளில் 36 ஓட்டங்கள் குவித்து போராடினார்.

இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் அவுஸ்திரேலிய அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 154 ஓட்டங்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.
இதன் மூலம் அவுஸ்திரேலிய அணியை 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |