சிங்கப்பூருக்கு மட்டும் அரிசி ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி!
சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி அளித்துள்ளது.
சிங்கப்பூர் இந்தியாவுடன் கொண்டுள்ள சிறப்பான உறவைக் கருத்தில் கொண்டு, சிங்கப்பூரர்களின் உணவுப் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரிசி ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டில் அரிசி விலையை நிலைநிறுத்துவதற்காக ஜூலை 20 முதல் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளது.
“இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான நெருங்கிய மூலோபாய கூட்டாண்மை மற்றும் நெருங்கிய பொருளாதார உறவுகளைக் கருத்தில் கொண்டு, சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதி செய்ய அனுமதிக்க இந்தியா முடிவு செய்துள்ளது,” என்று வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறினார்.
குறிப்பிட்ட அரிசி ரகங்களுக்கு கட்டுப்பாடுகள் இருந்தாலும், நடப்பு ஆண்டில் அரிசி ஏற்றுமதி அதிகமாக உள்ளதாக மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. ஜூலை 20-ம் திகதி, மத்திய அரசு அரிசி ஏற்றுமதி விதிமுறைகளில் திருத்தம் செய்து, பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியை தடை செய்யப்பட்ட பிரிவில் சேர்த்தது.
ஆனால், சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதி செய்ய இந்தியா பச்சை சிக்னல் அளித்து, இந்தத் தடையில் இருந்து விலக்கு அளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |