இந்தியாவில் இ-பாஸ்போர்ட்: முக்கிய அம்சங்கள், நன்மைகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை
இந்திய அரசாங்கம் வெளிநாட்டு பயணத்தை அதிகம் சுலபமாக்கும் நோக்கில் இ-பாஸ்போர்ட் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது வரிசையில் நிற்கும் நேரத்தை குறைக்கும் வகையில், நவீன மின்னணு அடையாள சோதனையை ஏற்றுக்கொள்ளும் வசதியை வழங்குகிறது.
இ-பாஸ்போர்ட் என்றால் என்ன?
இ-பாஸ்போர்ட் என்பது சாதாரண கடவுச்சீட்டின் மேம்பட்ட வடிவமாகும். இதன் முன் அட்டையில் சிறிய தங்கச் சின்னம் இருக்கும்.
பாஸ்போர்ட்டின் முன்கவரில் RFID (Radio Frequency Identification) சிப் மற்றும் ஆண்டெனாவும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதில் பயணிகளின் கைரேகைகள், முக விவரங்கள் போன்ற தனிப்பட்ட மற்றும் பயோமெட்ரிக் தகவல்கள் சேமிக்கப்படுகின்றன.
எப்படி வேறுபடுகிறது?
சாதாரண பாஸ்போர்டில் அச்சிடப்பட்ட தகவல்கள் மட்டுமே உள்ளன. ஆனால், இ-பாஸ்போர்டில் அந்தத் தகவல்கள் ஒரு சிப்களில் பாதுகாப்புடன் பதியப்பட்டுள்ளது. இது பொதுக்கூட்டு சாவி அமைப்பு (PKI) மூலம் குறியாக்கம் செய்யப்படுவதால், பாஸ்போர்ட் மோசடி செய்ய முடியாத பாதுகாப்பு வழங்குகிறது.
இ-பாஸ்போர்ட்டின் நன்மைகள்:
- பாஸ்போர்ட் போலியானது என உறுதி செய்ய இயலாத நிலை
- விமான நிலையங்களில் சோதனை நேரம் குறைதல்
- பயண அனுமதி எளிமையானது
- பாதுகாப்பு அதிகரிப்பு
எங்கு கிடைக்கிறது?
இந்த திட்டம் ஏப்ரல் 1, 2024 அன்று தொடங்கப்பட்டது. தற்போதைக்கு நாக்பூர், புவனேஷ்வர், ஜம்மு, கோவா, சிம்லா, ராய்ப்பூர், அமிர்தசரஸ், ஜெய்ப்பூர், சென்னை, ஐதராபாத், சூரத், ராஞ்சி உள்ளிட்ட நகரங்களில் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில், சென்னை பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம் மார்ச் 3, 2025 முதல் இ-பாஸ்போர்ட் வழங்கி வருகிறது. மார்ச் 22 வரை 20,700-க்கும் அதிகமான இ-பாஸ்போர்ட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்கும் முறை:
- Passport Seva Portal-ல் பதிவு செய்யவும்
- உங்கள் ID-யுடன் உள்நுழைக
- “Apply for Fresh/Reissue of Passport” தேர்வு செய்யவும்
- கட்டணம் செலுத்தி நேரம் முன்பதிவு செய்யவும்
- அச்சிடப்பட்ட ரசீது அல்லது SMS-ஐ காட்டவும்
- குறிப்பிடப்பட்ட PSK/RPO-விற்கு சென்று ஆவணங்களை சமர்ப்பிக்கவும்
- செயல்படுத்தப்பட்ட பின், உங்கள் இ-பாஸ்போர்ட் உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும்
தற்போதைய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு மாற்ற தேவையில்லை. அவை காலாவதியாகும் வரை செல்லுபடியாகும்.
இந்த இ-பாஸ்போர்ட் திட்டம் இந்தியாவின் டிஜிட்டல் இந்தியா முயற்சியின் ஒரு முக்கிய கட்டமாகும் மற்றும் உலகளவில் பயண அனுபவத்தை பாதுகாப்பானதாக்கும் நோக்கில் முன்னேற்றமான ஒரு பயணமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India e-passport 2025, e-passport application process India, e-passport benefits India, how to apply for e-passport, Passport Seva e-passport, RFID passport India, biometric passport India, Chennai e-passport center, Indian passport chip technology, e-passport online registration India