முதலில் செல்ஃபி., பின் கட்டிப்பிடித்து சில்மிஷம்: சிங்கப்பூர் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய சமையல்காரர்
சிங்கப்பூரில் இரண்டு டீன் ஏஜ் சிறுமிகளைத் துன்புறுத்தியதற்காக இந்தியாவைச் சேர்ந்த 44 வயது சமையல்காரருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியரான சுஷில் குமாருக்கு நான்கு மாத சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொது இடத்தில் அனுமதியின்றி சிறுமிகளை தொட்டு முத்தமிட்ட இரண்டு தனித்தனி வழக்குகளுக்காக இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மூன்று மாத இடைவெளியில் அவர் 14 மற்றும் 19 வயது சிறுமிகளை அவர் தாக்கியுள்ளார்.
Photo: EPA-EFE
இந்த வழக்கு தொடர்பான முதல் சம்பவம் ஆகஸ்ட் 2022-ல் நடந்தது. நகரின் ரயில் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த 14 வயது சிறுமியை தடுத்து நிறுத்தியுள்ளார். முதலில் அப்பெண் தான் ரயில் நிலையத்திற்கு செல்ல வழி கேட்கிறார் என்று நினைத்துள்ளார். ஆனால் குற்றம் சாட்டப்பட்ட சுஷில் குமார் சிறுமியின் கைகளையும் தோள்களையும் பிடித்துள்ளார். அதன் பிறகு, சிறுமிக்கு முத்தம் கொடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி, அந்த சிறுமியின் மொபைல் எண்ணைக் கேட்டு செல்ஃபி எடுத்துள்ளார், தன்னுடன் சாப்பிட அழைத்தார் மற்றும் பணம் தேவைப்பட்டால் அவரை தொடர்பு கொள்ளுமாறு கூறியுள்ளார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த சிறுமி வீட்டுக்கு வந்து தனது தாயிடம் இது குறித்து புகார் அளித்தார்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணையை தொடங்கியபோது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அன்று இரண்டு முறை வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு முறை வீடியோ கால் செய்து பார்த்துள்ளார். மேலும் வாட்ஸ்அப் மூலம் மோசமான ஸ்மைலிகள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுஷில் குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால், மூன்று மாதங்களுக்குப் பிறகு, இரண்டாவதாக ஒரு இளம்பெண்ணை இதேபோல் தாக்கியுள்ளார்.
இரண்டாவது சம்பவம் அடுக்குமாடி குடியிருப்பின் லிப்டில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் லிப்டில் 19 வயது பெண்ணை மோசமாக தொட்டார். அப்போது அப்பெண்ணுடன் தான் காதலை உணர்ந்ததாக கூறி கைகளை பிடித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக தனது வீட்டில் நடந்ததை தெரிவித்துள்ளார், ஆனால் பொலிசில் புகார் அளிக்கப்பட்டதா என தெரியவில்லை.
ஆனால் இந்த சம்பவத்தில், அன்றைய தினமே அவரை பொலிஸார் கைது செய்தனர். லிப்டில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றினர்.
தற்போது இரண்டு வழக்குகளிலும் நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. தான் செய்த செயலுக்கு வருந்துவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் இதை பரிசீலிக்காமல் நீதிபதி தண்டனை விதித்தார். வருந்தினால் அதே குற்றத்தை மீண்டும் செய்திருக்க மாட்டீர்கள் என்று நீதிபதி பதிலளித்தார்.
Singapore, Indian Chef, Harassment, prison
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |