ஈரான் தாக்குதலில் விமான நிலையத்தில் இந்தியர் உயிரிழப்பு
குவைத் விமான நிலையத்தில் ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளர்.
குவைத் விமான நிலையத்தில் ஈரான் தாக்குதல்
ஈரானின் கெஷம் தீவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக குவைத் மற்றும் பஹ்ரைனில் ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியது.
முதலில் ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன்களை அமெரிக்க ராணுவம் இடைமறித்து அழித்ததாக கூறப்பட்டது.

ஆனால், ஈரானின் தாக்குதலில் குவைத் விமான நிலையத்தின் ஒரு பகுதி கடுமையாக சேதமடைந்துள்ளதால், மறு அறிவிப்பு வரும் வரை விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்தியர் உயிரிழப்பு
மேலும், இந்த தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ள
குவைத் விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில் இந்தியர் உயிரிழந்த துயரச் சம்பவத்திற்கு, குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
Embassy of India in Kuwait expresses its deepest condolences at the tragic demise of an Indian national due to an attack on the airport in Kuwait today. The Embassy is in touch with the bereaved family and is closely coordinating with the Kuwaiti authorities to render all…
— India in Kuwait (@indembkwt) June 3, 2026
மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதுடன், அவர்களுக்கு இச்சம்பவத்தில் தேவையான அனைத்து ஆதரவையும் உதவியையும் வழங்குவதற்காக குவைத் அதிகாரிகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |