வெளிநாட்டில் கேரள இளம்பெண்ணிற்கு நடந்த கனவிலும் நினைக்காத துயர சம்பவம்!
வெளிநாட்டில் செவிலியராக பணிபுரிந்த கேரளாவை சேர்ந்த இளம்பெண் சாலை விபத்தில் திடீரென உயிரிழந்தது அவரின் குடும்பத்தாரையும், நண்பர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சின்சூ ஜோசப் (28) என்ற இளம்பெண் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜா நகரில் நடந்த சாலை விபத்தில் கடந்த வியாழன் அன்று உயிரிழந்தார். சின்சூவின் மரணம் அவரின் கணவர் ஜிபின் ஜான், இரண்டு சகோதரிகள் உள்ளிட்ட குடும்பத்தாரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இரு தினங்களுக்கு முன்னர் சின்சூவின் சடலம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Joseph family
சின்சூ உயிரிழந்தது எப்படி?
சம்பவத்தன்று தனது பணியை முடித்துவிட்டு மூத்த சகோதரி அஞ்சுவை காண சின்சூ சென்று கொண்டிருந்தார். அப்போது கார் மோதியதில் அவர் உயிரிழந்திருக்கிறார்.
சின்சூ சொன்ன இடத்திற்கு அஞ்சு வந்த நிலையில் அங்கு ஆம்புலன்ஸ் இருந்ததோடு கூட்டமும் கூடியிருக்கிறது. தொடர்ந்து சின்சூவுக்கு போன் செய்தும் அவர் எடுக்காததால் பதற்றமடைந்துள்ளார் அஞ்சு.
அந்த ஆம்புலன்ஸில் சடலமாக இருப்பது சகோதரி சின்சூ தான் என தெரியாமலேயே இருந்துள்ளார். பின்னர் சாலையில் சிதறி கிடந்த சகோதரியின் செருப்பை பார்த்தவுடன் தான் உயிரிழந்தது சின்சூ என உணர்ந்து கதறி துடித்திருக்கிறார். இந்த தகவலை சின்சூவின் கணவரிடம் சொன்ன போது அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்.
Joseph family
விபத்துக்கான சரியான சூழ்நிலைகள் தெளிவாக தெரியவில்லை மற்றும் ஷார்ஜா காவல்துறை இன்னும் அது குறித்த விவரங்களை வெளியிடவில்லை. சின்சூவின் மைத்துனர் சபின் கூறுகையில், நீங்கள் சின்சூவை ஒரு முறை சந்தித்தாலும், அவரை ஒருபோதும் மறக்க மாட்டீர்கள். அந்த அளவுக்கு இனிமையாகவும், அக்கறையோடும் பேசுவார்.
தனது கணவர் ஜிபின், 4 வயது மகள் ஹெல்லா ஆகியோரை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு அழைத்து கொள்ள முடிவு செய்திருந்தார். சிஞ்சூ கொஞ்சம் பணம் சம்பாதித்து ஒரு சிறிய வீட்டை உருவாக்கவும், கொஞ்சம் நிலம் வாங்கவும் விரும்பினார்.
தன் தங்கையின் திருமணத்திற்காகவும், தன் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தவும் பணம் ஈட்ட விரும்பினார், இதோடு தன் மகளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்து மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று கனவு கண்டார் என கூறியுள்ளார்.
Joseph family