உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன் முகமது ஷமிக்கு கிடைத்த மறக்க முடியாத பரிசு!
2023 உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடியதற்காக கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு பாரிய பரிசை வழங்கியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரரும், இந்த உலகக் கோப்பையில் இந்தியாவின் நாயகனுமான வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் கிராமத்தில் புதிய மினி ஸ்டேடியம் மற்றும் ஓபன் ஜிம்னாசியம் (உடற்பயிற்சி கூடம்) அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.
முகமது ஷமிக்கு மறக்க முடியாத பரிசு
நாளை (நவம்பர் 19) இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்பே, முகமது ஷமிக்கு உத்தரப் பிரதேச அரசு இந்த மறக்க முடியாத பரிசை வழங்கியுள்ளது.
மினி ஸ்டேடியம் மற்றும் திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்திற்கான நிலம் விரைவில் கையகப்படுத்தப்படும் என்றும், அதற்கான முன்மொழிவு விரைவில் அரசுக்கு அனுப்பப்படும் என்றும் அம்ரோஹா மாவட்ட நீதிபதி ராஜேஷ் தியாகி ஐஏஎஸ் தெரிவித்தார்.
ஷமி பிறந்து வளர்ந்த கிராம்
ஷமி உத்தரபிரதேசத்தின் அம்ரோஹாவில் உள்ள சஹாஸ்பூர் அலிநகர் கிராமத்தில் பிறந்து வளர்ந்தார்.
உத்தரபிரதேசத்தில் மொத்தம் 20 மைதானங்கள் கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. இதில், ஷமி பிறந்து வளர்ந்த அலிநகர் கிராமத்தில் விளையாட்டு அரங்கம் மற்றும் உடற்பயிற்சி கூடம் கட்டப்படும்.
இந்த உலகக் கோப்பையில் இந்தியாவின் துருப்புச் சீட்டு ஷமிதான். முதல் நான்கு போட்டிகளில் தொடக்க பதினொன்றில் இடம் பெற முடியாமல் போன ஷமி, ஹர்திக் பாண்டியா காயம் அடைந்ததை அடுத்து அணியில் இடம் பெற்றார். அடுத்து நடந்தது தான் அதிரடி. ஷமி அவரது வாழ்க்கையில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஷமி ஏற்கனவே 6 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நியூசிலாந்திற்கு எதிரான அரையிறுதியில், அவர் மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய வீரரின் சிறந்த ஒருநாள் போட்டிக்கான சாதனையைப் பெற்றார். தற்போது போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தியவரும் ஷமி தான்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Uttar Pradesh government, Team India pacer Mohammed Shami, Mohammed Shami village Sahaspur Alinagar, cricket stadium in Mohammed Shami village