தேனிலவுக்குச் சென்ற இந்திய வம்சாவளிப்பெண்ணைக் கொன்றவர் முன்னதாகவே விடுவிப்பு: கொந்தளிக்கும் குடும்பத்தார்
தென்னாப்பிரிக்காவுக்கு கணவருடன் தேனிலவுக்காக சென்ற இந்திய வம்சாவளியினரான ஒரு பெண் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளி தண்டனைக் காலத்தின் பாதியிலேயே விடுவிக்கப்படுகிறார்.
2010ஆம் ஆண்டு இந்திய வம்சாவளியினரான Anni Dewani (28), தென்னாப்பிரிக்காவில் தனது கணவருடன் தேனிலவுக்கு செல்லும்போது மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.
அவரை மூன்று பேர் காரில் கடத்திச் சென்று விட்டதாகவும் தான் மட்டும் தப்பி வந்து விட்டதாகவும் Anniயின் கணவரான Shrien கூறியிருந்தார். Anniயின் கொலை வழக்கிலிருந்தும் அவர் 2014ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். Anniயை கடத்தி கொலை செய்ததாக Zola Tongo (42) என்பவரும் மற்றும் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், கிட்டத்தட்ட பாதி தண்டனைக்காலம் மட்டுமே முடிந்துள்ள நிலையில், வரும் ஜூன் மாதம் 21ஆம் திகதி Tongo பரோலில் விடுவிக்கப்பட உள்ளார்.
இந்த செய்தி அறிந்ததும் Anniயின் குடும்பத்தினர் கடுங்கோபம் அடைந்துள்ளனர். Tongo முக்கியமான பல தகவல்களை மறைப்பதாக அவர்கள் நம்புகிறார்கள்.
அதாவது, தற்போது மும்பையில் ஒரு ஆண் நண்பருடன் வசித்து வரும் Shrien ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதை மறைத்தே தனது மகளை அவர் திருமணம் செய்ததாக கூறும் Anniயின் தந்தையான Hindocha, தனது மருமகனான Shrienதான் தனது மகளை ஆள் வைத்து கொன்று விட்டதாக சந்தேகிக்கிறார். ஏனென்றால், Anni கொலை செய்யப்படுவதற்கு முன்னும், கொலை செய்யப்பட்ட பின்னரும் Tongoவுடன் Shrien பேசியதும், அவருக்கு பணம் கொடுத்ததும் CCTV கெமராவில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், அநியாயமாக தங்கள் மகளின் வாழ்வைக் கெடுத்த Tongo பரோலில் வெளிவரப்போவதை அறிந்த Anni குடும்பத்தினர் கொந்தளித்துப் போயிருக்கிறார்கள்.
இதற்கிடையில், Tongo பரோலில் விடுவிக்கப்பட்டாலும், ஏராளமான நிபந்தனைகளின் பேரில்தான் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். வீட்டுச் சிறை, சமூக சேவை, மது மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தத் தடை என பல நிபந்தனைகள் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், Anniயின் குடும்பத்தினரோ, தங்ளுக்குத் தங்கள் மகள் கிடைக்கப்போவதில்லை. கொடூர கொலையாளியாகிய Tongoவோ, சிறிது காலத்திற்குப் பின் சாதாரணமாக வாழப்போகிறார். ஆப்பிரிக்க நீதித்துறை எங்களைக் கைவிட்டுவிட்டது என்கிறார்கள்.