குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்ட முதல் இந்தியர்: கேரள அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
இந்தியாவில் முதன்முறையாக குரங்கம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட நபர் குணமடைந்து விட்டதாக கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவித்துள்ளார்.
ஆப்பிரிக்க நாடுகளில் பரவலாக காணப்படும் இந்த குரங்கம்மை பாதிப்புகள் தற்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது.
கடந்த வாரம் மட்டும் ஆப்பிரிக்க பிராந்தியத்தில் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு 5 பேர் வரை உயிரிழந்தாக உலக சுகாதார அமைப்பு தகவல் வெளியிட்டது.
மேலும் கடந்த சனிக்கிழமை குரங்கம்மை நோய் தொற்று வேகமாக பரவுவதை கருத்தில் கொண்டு சுகாதார அவசர நிலையையும் உலக சுகாதார மையம் பிரகடனம் செய்தது.
இருப்பினும் குரங்கம்மை நோய் தொற்றின் பரவல் 75 நாடுகளில் மொத்தம் 16,000 பேருக்கு உறுதி செய்யப்பட்டதுடன், ஸ்பெனில் ஒருவர் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
இது ஐரோப்பாவில் பதிவான முதல் குரங்கம்மை தொற்று பலியாகும், அத்துடன் இது ஆப்பிரிக்காவிற்கு வெளியே பதிவாகும் இரண்டாவது பலியாகும்.
இந்தநிலையில் இந்தியாவில் முதல்முறையாக குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்ட நபர் முழுமையாக குணமடைந்ததாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: 9 வயது சிறுமி சாலையில் குத்திக் கொலை: சந்தேகிக்கப்படும் நபரின் சிசிடிவி புகைப்படங்கள் வெளியீடு
குரங்கம்மைக்கு இன்னொரு உயிர் பலி., 24 மணிநேரத்தில் இரண்டாவது மரணம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு குரங்கம்மை பாதிப்பு கடந்த 14ம் திகதி உறுதி செய்யப்பட்டு, திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.