9 வயது சிறுமி சாலையில் குத்திக் கொலை: சந்தேகிக்கப்படும் நபரின் சிசிடிவி புகைப்படங்கள் வெளியீடு
பிரித்தானியாவின் பாஸ்டன் பகுதியில் லிலியா வால்டிட்(9) என்ற சிறுமி கத்தியால் குத்தப்பட்டு மர்மமான முறையில் சாலையில் இறந்து கிடந்த நிலையில் அவரது வழக்கு தொடர்பான விசாரணையில் சந்தேகிக்கப்படும் நபரின் நான்கு சிசிடிவி புகைப்படங்களை பொலிஸார் இன்று வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் வியாழன் கிழமை 6:20 மணியளவில் லிங்கன்ஷையரின்(Lincolnshire) பாஸ்டனில் லிதுவேனியா நாட்டை சேர்ந்த லிலியா வால்டிட்(9) Lilia Valutyte என்ற சிறுமி மர்மமான முறையில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் விசாரணையை தீவிரப்படுத்திய லிங்கன்ஷையர்(lincolnshire) காவல்துறை லிலியா வால்டிட் சிறுமியின் கொலை சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் நபரின் நான்கு சிசிடிவி புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
மேலும் லிங்கன்ஷையர் பொலிஸார் சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படங்களை வெளியிட்டு, இவரை எங்கேயும் கண்டால் அவரை நேரடியாக அணுகாமல் உடனடியாக 999 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளும்படி தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு காவல்துறை சார்பில் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: கொல்லப்பட்ட100 ரஷ்ய வீரர்கள்...பின்வாங்கும் ரஷ்ய படைகள்: கெர்சனில் போர் தீவிரம்
லிலியா வால்டிட் கொலை விசாரணை தொடர்பாக இதற்கு முன்னாதாக கைது செய்யப்பட்ட இருவர் எந்தவொரு வழக்குகளும் பதியப்படாமல் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.