இந்தோனேசியாவில் 40 பயணிகளுடன் கடலில் மூழ்கிய கப்பல்: 15 பேர் பலி, மீட்பு பணி தீவிரம்
இந்தோனேசியாவில் கப்பல் கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 15 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாகவும் 19 பேர் காணாமல் போகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நீரில் மூழ்கிய கப்பல்
இந்தோனேசியாவின், தென்கிழக்கு சுலவேசி மாகாணத்தின் தலைநகரான கெந்தரிக்கு தெற்கே சுமார் 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மூனா தீவின் மாவசங்க பே(Mawasangka Bay) பகுதியில் சிறிய ரக கப்பல் ஒன்று ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென நீரில் மூழ்கியது.
மாவசங்க பே-வின் இரு கரைகளில் அமைந்துள்ள வெறும் 20 நிமிட பயண நேரம் கொண்ட இரண்டு நகரங்களுக்கு இடையே இந்த கப்பல் போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டு இருந்தது.
AP
ஞாயிற்றுக்கிழமை 40 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற கப்பல் 1 கி.மீ தூரத்தை கடந்து இருந்த போது திடீரென நீரில் மூழ்கி விபத்தில் சிக்கியது.
15 பேர் உயிரிழப்பு
இந்த விபத்தில் உயிரிழந்த 15 பயணிகளின் உடல்களை மீட்டு இருப்பதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 19 பேர் வரை இந்த விபத்தில் காணாமல் போகி இருப்பதாகவும் , 6 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு இருப்பதாக தேசிய பேரிடர் மீட்பு மேலாண்மை திங்கட்கிழமை தகவல் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களின் உடல்கள் சம்பந்தப்பட்ட உறவினர்களிடம் வழங்கப்பட்டு வருகிறது, அத்துடன் உயிருடன் மீட்கப்பட்ட நபர்கள் அருகில் உள்ள உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக உள்ளூர் மீட்புக் குழுவின் முகமது அரஃபா தெரிவித்துள்ளார்.
மீட்பு பணிகள்
இந்நிலையில் விபத்து நடந்த பகுதியில் காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Reuters
அதே சமயம் இந்த கப்பல் விபத்து எப்படி நேர்ந்தது, அதற்கான பின்னணி காரணம் என்ன என்பது குறித்து முழுவதும் இதுவரை தெரியவில்லை.
இந்தோனேசியாவின் பல இடங்களில் இது போன்று கப்பல் போக்குவரத்துகள் நடந்து வரும் நிலையில், அவ்வப்போது இத்தகைய விபத்துக்கள் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |