இந்தோனேசியக் கடலில் பயணிகள் கப்பலில் தீ: 5 பேர் உயிரிழப்பு, 284 பேர் மீட்பு
இந்தோனேசியாவில் பயணிகள் கப்பலான KM Barcelona 5-ல் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தும், 284 பேர் அதிசயமாக உயிர் தப்பியும் உள்ளனர்.
இந்த பரிதாபமான சம்பவம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் Talaud தீவுகளிலிருந்து North Sulawesi-யில் உள்ள Manado துறைமுகம் நோக்கிப் பயணிக்கும்போது நடந்தது.
அதிக புகைமூட்டத்துடன் தீ பரவிய போது, பயணிகள் கடலுக்குள் குதித்து தங்களை உயிரோடு காப்பாற்ற முயற்சித்தனர்.
சிலர் பீதி அடைந்த நிலையில் ஜாக்கெட்டுகள் அணிந்து கொண்டு, கைபேசியில் அழைத்துச் சொல்லிய சோகமான காட்சிகள் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தீ விபத்து Talise தீவின் அருகே நடந்ததாக, North Sulawesi மாநில பேரிடர் மேலாண்மைத் துறைச் செயலாளர் Jerry Harmonsina தெரிவித்தார்.
இந்த மீட்பு பணிகளில் கடற்படை, தேசிய தேடல் மற்றும் மீட்பு அமைப்பு, கடலோர காவல்படை மற்றும் உள்ளூர் மீனவர்கள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
இம்மாதம், Morning Midas எனும் ஒரு சரக்குக் கப்பல் பசிபிக் கடலில் தீப்பிடித்து மூழ்கியிருந்தது. அதில் 800க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம், கப்பல் பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு நடவடிக்கைகள் குறித்து மேலும் கவனம் தேவை என்பதை வலியுறுத்துகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
KM Barcelona ferry fire, Indonesia ship blaze 2025, Talise Island ferry fire, 5 dead ferry fire Indonesia, KM Barcelona 5 rescue, Indonesia ferry accident video, Indonesia maritime fire 2025, North Sulawesi ferry fire, Ferry fire passenger rescue, Indonesia disaster ferry fire