தங்க சுரங்கத்தில் 5 நாட்களாக சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள்: அதிகாரிகள் வெளியிட்ட பகீர் தகவல்
இந்தோனேசியாவில் சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் சிக்கிய 8 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
சட்டவிரோத தங்கச் சுரங்கம்
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் அமைந்துள்ள சட்டவிரோத தங்கச் சுரங்கத்தில் 8 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்ட நிலையில், ஐந்தாவது நாளாக தேடுதல் முயற்சிகள் உரிய பலனை அளிக்கவில்லை என உள்ளூர் மீட்புக்குழு அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அந்த 8 பேர்களும் மரணமடைந்திருக்கவே அதிக வாய்ப்பு என குறிப்பிட்டுள்ளனர். உரிமம் பெறாத சுங்கங்களில் பொதுவாக பாதுகாப்பு அம்சங்கள் எதும் பின்பற்றப்படுவதில்லை.
இது கனிம வளம் நிறைந்த தென்கிழக்கு ஆசிய தீவுக்கூட்டம் முழுவதும் பொதுவானதாகவே பார்க்கப்படுகிறது. மட்டுமின்றி அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகின்றன. சம்பவத்தின் போது தொழிலாளர்கள் 60 மீற்றர் ஆழமுள்ள குழிக்குள் தோண்டிக் கொண்டிருந்தனர்.
8 பேர்களும் இறந்திருக்கவே வாய்ப்பு
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை திடீரென அந்த சுரங்கத்தில் தண்ணீர் புகுந்தது. தகவலையடுத்து மீட்ப்புக்குழுவினர் களமிறக்கப்பட்டு, இரவு பகல் பாராமல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
ஆனால் உரிய பலனைத் தரவில்லை என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்கள் 8 பேர்களும் இறந்திருக்கவே வாய்ப்பு என அதிகாரிகள் தரப்பு குறிப்பிட்டுள்ளனர்.
சிக்கிய சுரங்கத் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் மேற்கு ஜாவாவிலிருந்து அப்பகுதியில் உள்ள சுரங்கத்திற்குச் சென்றுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, அனுமதியின்றி சுரங்கத்தை இயக்கியதாக நான்கு பேர் மீது வெள்ளிக்கிழமை பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் ஒருவர் மாயமாகியுள்ள நிலையில், சந்தேக நபர்கள் 5 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனையும் சுமார் 6.6 மில்லியன் டொலர் அபராதமும் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |