உடல் உருகும் வெப்பம்... 20 அடிக்கு மேல் கொழுந்துவிட்டெரியும் நெருப்பு: காட்டுத்தீயின் கோர முகம்
கிரேக்கத்தின் ரோட்ஸ் தீவில் தீயணைப்பு வீரர்கள் சுமார் 20 அடிக்கு மேல் கொழுந்துவிட்டெரியும் நெருப்புடனும் உடல் உருகும் வெப்பத்துடனும் போராடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
20 பேர்கள் கொண்ட குழு
இப்படியான சூழலில், நெருப்பை கட்டுக்குள் கொண்டுவருவது முடியாத செயல் என நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். 2021 ஆகஸ்டு மாதத்தில் இருந்து கிரேக்க அரசாங்கத்தால் காட்டுத்தீ தொடர்பில் களமிறக்கப்பட்ட 20 பேர்கள் கொண்ட குழுவில் பிரித்தானியாவின் கிரேக் ஹோப் என்பரும் ஒருவர்.
Image: Phil Harris
அப்போது ஏதென்ஸுக்கு தென்மேற்கே 100 மைல் தொலைவில் உள்ள பெலோபொன்னீஸில் 25 மைல் பரப்பளவில் காட்டுத்தீ ஏற்பட்டது. தற்போதைய ரோட்ஸ் தீவு சூழலை குறிப்பிட்ட அவர், 30 அடிக்கு மேல் கொழுந்துவிட்டெரியும் நெருப்பை கட்டுப்படுத்துவது என்பது சாதாரண விடயமல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பயிற்சி பெற்ற தீயணைப்பு வீரர்களுக்கு உண்மையில் கடுமையான சவாலை ஏற்படுத்தும் சூழல் இது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற கடினமான சூழலில் பணியாற்றும் வீரர்கள் கண்டிப்பாக ஒவ்வொரு மணி நேரத்திற்கு குறைந்தது ஒரு லிற்றர் தண்ணீர் பருக வேண்டும்.
வெப்ப அலை காரணமாக காட்டுத்தீ
கிரேக்கத்தில் மட்டுமல்ல இத்தாலியின் பல பகுதிகளிலும் வெப்ப அலை காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. ஆனால் லோம்பார்டி மற்றும் வெனெட்டோ பகுதிகளில் அப்பகுதி மக்கள் ஆலங்கட்டி மழையை எதிர்கொண்டுள்ளனர்.
@getty
மிலனில், இடியுடன் கூடிய மழையால் மரங்கள் சாய்ந்தன, அதே நேரத்தில் பெர்லினில் திங்கள்கிழமை இரவு பெய்த மழையால் போக்குவரத்து கடுமையாக ஸ்தம்பித்தது. சிசிலியின் பலேர்மோ விமான நிலையம் நேற்று தீ விபத்து காரணமாக பல மணி நேரம் மூடப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |