ஐரோப்பாவின் மிக ஏழ்மையான நாட்டை பற்றி தெரியுமா?
உக்ரைனுக்கும் ரொமேனியாவுக்கும் நடுவில் அமைந்துள்ள மால்டோவா நாட்டைக் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை அறிந்துகொள்ளலாம்.
அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் செல்லாத நாடாகிய மால்டோவா, ஒயின் தயாரிப்புக்கும் துறவி மடங்களுக்கும் புகழ் பெற்றதாகும்.
மொழி
மால்டோவாவில் பேசப்படும் மொழிகளில் முக்கியமானது ரொமேனிய மொழி. அதற்கு ஒரு காரணம், மால்டோவா பல நூற்றாண்டுகளாக ஒட்டமான் பேரரசின் கீழும், அதற்குப் பின் ரஷ்ய ஆளுகையின் கீழும், பின்னர் ரொமேனியாவின் ஒரு பகுதியாகவும் இருந்தது. 1991ஆம் ஆண்டுதான் அது சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து மால்டோவா என்ற தனி நாடாகியது.
வருவாய்
மால்டோவா, ஐரோப்பாவின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்று.
மால்டோவா நாட்டின் முக்கிய வருவாய், வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்த மால்டோவா நாட்டவர்கள், அங்கிருந்து நாட்டுக்கு அனுப்பும் பணம் மூலம்தான் வருகிறது. ஆகவே, மால்டோவாவில் உழைக்கும் வயதுடையவர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது.
Photo by Twitter/DestRecommended
இராணுவம்
மால்டோவா நாட்டின் இராணுவத்தில் மொத்தமே 6,500 இராணுவ வீரர்கள்தான் உள்ளனர். அவர்களும் சோவியத் யூனியன் காலத்துப் பழமையான ஆயுதங்களையே வைத்துள்ளார்கள்.
ஒயின் தயாரிப்பு
வருடத்தில் 300 நாட்களுக்கு வெயில் இருப்பதால், மால்டோவாவின் சீதோஷ்ணம் விவசாயத்துக்கு, குறிப்பாக, திராட்சை பயிரிடுவதற்கு உகந்ததாக காணப்படுகிறது.
ஆகவே, ஒயின் தயாரிப்பு, நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
சுற்றுலா
கடந்த ஆண்டு மால்டோவாவிற்கு 152,000 பேர் சுற்றுலா வந்ததாக பதிவாகியுள்ளது. விடயம் என்னவென்றால், அவர்களில் 29,000 பேர்தான் வெளிநாட்டவர்கள்!
Samaa English
ரஷ்யாவின் தலையீடு
சோவியத் யூனியன் உடைந்தபின், உள்நாட்டு யுத்தம் ஒன்றைத் தொடர்ந்து தன்னை தனிக் குடியரசாக அறிவித்துக்கொண்ட Transnistria என்னும் பகுதிக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது.
அங்குள்ளோர் ரஷ்ய மொழி பேசுகிறார்கள். ஆனால், அந்த பகுதியை பெரும்பாலான நாடுகள் தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. அந்த பகுதி, மால்டோவாவின் ஒரு பகுதியாகவே சர்வதேச சமுதாயத்தால் கருதப்படுகிறது. அங்கு, ரஷ்ய வீரர்கள் 1,500 பேரும், ஏராளம் ஆயுதங்களும் குவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மால்டோவா தனியாக இல்லை, அதனுடன் நாங்கள் நிற்கிறோம் என ரஷ்யாவுக்குக் கூறும் வகையில், மால்டோவாவில் ஐரோப்பிய அரசியல் சமுதாயத்தின் இரண்டாவது மாநாடு நாளை நடத்தப்பட உள்ளது. அதில், 47 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.