2 மாதங்களுக்கு பிறகு மணிப்பூரில் தொடங்கிய இணைய சேவை!
மணிப்பூரில் 2 மாதங்களுக்குப் பிறகு, நிபந்தனைகளுடன் பிராட்பேண்ட் இணைய சேவையை வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூர் கலவரம்
இந்தியா, மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. அங்குள்ள மெய்தி இனத்தவர் தங்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்க கோரி கோரிக்கை வைத்த நிலையில், அதற்கு குகி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இரு சமூகத்தினருக்கும் கடந்த மே மாதம் முதல் தொடங்கிய மோதல் கலவரமாக வெடித்தது. இதனால், பல வீடுகள், கடைகள் தரைமட்டமாக்கப்பட்டன. இதுவரை, 50க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
பாதுகாப்பிற்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். தினமும், தீ வைப்பு, துப்பாக்கிச்சூடு போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெறுகின்றன.
அதுமட்டுமில்லாமல், இரண்டு பழங்குடி பெண்களை தெருவில் நிர்வாணமாக அழைத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
மீண்டும் இணையசேவை
மணிப்பூர் அரசு மொபைல் இணைய சேவையை அனுமதிக்காமல், பிராட்பேண்ட் சேவையை நிபந்தனையுடன் அனுமதித்துள்ளது.
அதன்படி, அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், சுகாதார வசதிகள், சமையல் எரிவாயு முன்பதிவு மற்றும் பிற ஆன்லைன் அடிப்படையிலான குடிமக்களை மையமாகக் கொண்ட சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு இணையத் தடை ஓரளவு நீக்கப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
சேவையைப் பெற, கணினி IP முகவரி கொண்டு தினசரி ID மற்றும் பாஸ்வேர்டு வழங்கப்படும் எனவும், கணினிகளில் இருந்து ஹாட்ஸ்பாட் வசதியை பயன்படுத்தி இணைய சேவையை பிற செயலிகளில் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுவதாகவும், விதிகளை மீறி பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |