இந்தியா உட்பட 33 நாட்டவர்களுக்கு Visa தேவையில்லை: மேற்காசிய நாடொன்று அறிவிப்பு
இலங்கை, தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, கென்யா ஆகிய நாடுகளை தொடர்ந்து மற்றொரு நாடும் இந்தியர்கள் வருவதற்கு விசா தேவையில்லை என்று அறிவித்துள்ளது.
ஈரான் அரசு
பல்வேறு நாடுகள் தங்களது சுற்றுலாத்துறை மேம்படுத்துவதற்காக பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அந்தவகையில் தங்களது நாடுகளுக்கு வருபவர்களுக்கு Visa free entry கொடுத்து வருகிறது.
இந்நிலையில், நேற்று கூடிய ஈரான் அமைச்சராவையில் இந்தியா உள்பட 33 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா தேவையில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய ஈரான் கலாச்சார பாரம்பரியம், சுற்றுலா மற்றும் கைவினைப்பொருட்கள் துறை அமைச்சர் Ezzatollah Zarghami, "அரசின் இந்த நடவடிக்கையானது சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், ஈரானிற்கு அதிகமானோர் சுற்றுலா வரவேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்டது" என்றும் கூறியுள்ளார்.

உலகில் எந்த நாட்டவருக்கும் Visa தேவையில்லை., பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற நாட்டின் அறிவிப்பு
எந்தெந்த நாடுகள்
இந்தியா உள்பட ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ), பஹ்ரைன், சவுதி அரேபியா, கத்தார், குவைத், லெபனான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துனிசியா, மொரிட்டானியா, தான்சானியா, ஜிம்பாப்வே, மொரிஷியஸ், சீஷெல்ஸ், இந்தோனேசியா, தாருஸ்ஸலாம், ஜப்பான், சிங்கப்பூர், கம்போடியா வியட்நாம், பிரேசில், பெரு, கியூபா, மெக்சிகோ, வெனிசுலா, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, செர்பியா, குரோஷியா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஈரானிற்கு வருவதற்கு Visa தேவையில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |