இஸ்ரேலின் தாக்குதல்கள் முதலில் நிறுத்தப்பட வேண்டும்: ஈரானிய வெளியுறவு அமைச்சர்
ஈரானின் அணுசக்தி திட்டம் அமைதியானது என்று வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி கூறியுள்ளார்.
ஈரான் நடத்திய தாக்குதல்
இஸ்ரேல், ஈரான் சண்டை தொடர்ந்து 9வது நாளாக நீடித்து வருகிறது. ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலின் தெற்கில் அமைந்துள்ள ஹைஃபா துறைமுகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
அதேபோல் மத்திய இஸ்ரேலில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலால், ஹோலோனில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்த நிலையில், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி (Abbas Araghchi) இஸ்ரேலின் தாக்குதல் குறித்து பேசியுள்ளார்.
அணுசக்தி திட்டம்
அவர் கூறுகையில், "எங்கள் நாடு இராஜதந்திரத்திற்கு திறந்திருக்கிறது. ஈரானின் அணுசக்தி திட்டம் அமைதியானது. ஆனால் இஸ்ரேலின் தாக்குதல்கள் முதலில் நிறுத்தப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
முன்னதாக அவர், ஜெனீவாவில் ஐரோப்பிய முக்கிய நாடுகள் மற்றும் பிரித்தானியாவின் வெளியுறவு அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |