மாயமான 17 வயது சிறுமி பாதுகாப்பு படையினரால் கொலை! இறுதிச் சடங்கில் திருடப்பட்ட உடல்
தலைநகரில் உள்ள ஒரு தடுப்பு மையத்தில் உள்ள ஒரு பிணவறையில் நிகாவின் உடலை அவரது குடும்பத்தினர் கண்டுபிடித்தனர்
தங்கள் மகளை அடையாளம் காணச் சென்றபோது, அவளுடைய உடலைப் பார்க்க அதிகாரிகள் தங்களை அனுமதிக்கவில்லை என நிகாவின் பெற்றோர் குற்றம்சாட்டினர்
ஈரானில் பாதுகாப்பு படையினரால் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் திருடி புதைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தெஹ்ரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என பொலிசாரால் தாக்கப்பட்ட மாஷா அமினி (22) என்ற இளம்பெண் உயிரிழந்த சம்பவம் ஈரானில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பல நகரங்களில் நடந்த போராட்டங்களில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 133 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 20ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள சென்ற 17 வயது சிறுமியான நிகா ஷகராமி மாயமானார். ஆனால் அவர் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கொலை செய்யப்பட்டதாக தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து சிறுமியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் நிகா ஷகராமியின் உடல் திருடப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்கில் கூட்டம் கூடாமல் இருக்க ரகசிய இடத்தில் பாதுகாப்பு படையினரால் புதைக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
EPA-EFE/Erdem Sahin
அதிகாரிகள் நிகா ஷகராமியின் உடலை கைப்பற்றி 40 கிமீ தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் ரகசியமாக புதைத்துள்ளனர் என்று பிபிசி பாரசீக வட்டாரங்கள் தெரிவித்தன.