விபத்தில் உயிரிழந்த ஈரானிய ஜனாதிபதியின் உடல் மீட்பு
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில், தற்போது அவருடைய உடல் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் அதிபர் உடல் மீட்பு
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு மந்திரி ஆகியோர் சென்ற ஹெலிகாப்டர் அஜர்பைஜான் எல்லையில் உள்ள மலைப்பகுதியில் விபத்துக்குள்ளாகியது.
இந்த ஹெலிகாப்டரில் ஈரானிய அதிபருடன் வெளியுறவு மந்திரி ஹொசைன் அமிரப்துல்லாஹியன் மற்றும் கிழக்கு அஜர்பைஜான் மாகாண கவர்னர் மலேக் ரஹ்மதி என்பவர்களும் பயணித்துள்ளனர்.
விபத்துக்குள்ளாகிய நிலையில் ஹெலிகாப்டரில் இருந்த ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஏனையவர்களும் உயிரிழந்து விட்டதாக அரசு ஊடகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் ஹெலிகாப்டரில் பயணித்த ஏனை அதிகாரிகளின் உடலும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |