4 மில்லியன் புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் ஈரான்! காலக்கெடுவிற்கு முன்பே நடவடிக்கை
ஈரான் காலக்கெடுவிற்கு முன்பே 4 மில்லியன் ஆப்கானியர்களை நாடு கடத்த விரைகிறது.
40 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள்
2021ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின்னர், ஏராளமான மக்கள் ஈரானுக்கு புலம்பெயர்ந்தனர்.
தற்போது 40 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் புலம்பெயர்ந்தவர்களாக ஈரானில் வசிக்கின்றனர்.
இந்நிலையில், ஈரானில் வசித்து வரும் ஆப்கானியர்கள் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேறும்படி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்படுவார்கள்
மேலும், ஆப்கானியர்கள் நாட்டைவிட்டு வெளியேறாவிட்டால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக சுமார் 4 மில்லியன் ஆப்கானியர்கள் காலக்கெடுவிற்கு முன்பே ஈரானில் இருந்து நாடு கடத்தப்பட உள்ளனர்.
முன்னதாக, கடந்த மாதத்தில் ஐ.நாவின் Migration Agencyயின்படி, ஆயிரக்கணக்கான தனிமையான பெண்கள் உட்பட 250,000க்கும் மேற்பட்டோர் ஈரானில் இருந்து ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |