அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள்: முக்கிய தீர்மானத்தை திரும்ப பெற்றது ஈரான்
அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பான தீர்மானத்தை ஈரான் திரும்ப பெற்றுள்ளது.
தீர்மானத்தை திரும்ப பெற்றது ஈரான்
ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பிடம் இருந்து அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களை தடை செய்யும் வரைவு தீர்மானத்தை ஈரான் திரும்ப பெற்றுள்ளது.
இஸ்ரேல் உடனான சமீபத்திய மோதல், அமெரிக்காவின் அதிகரிக்கும் அழுத்தம் ஆகியவற்றின் காரணமாக ஈரான் இந்த முடிவை எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் மாதத்தில் ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலை கண்டித்து, ஈரான் மற்றும் அதற்கு ஆதரவாக ரஷ்யா, சீனா, பெலாரஸ் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் ஐக்கிய நாடுகளின் அணுசக்தி முகமையின் வருடாந்திர மாநாட்டின் போது தீர்மானம் ஒன்றை சமர்ப்பித்தனர்.
ஆனால் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் அமெரிக்கா பல IAEA உறுப்பு நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக ஈரான் குற்றம் சாட்டியது.
மேலும் ஈரானிய தூதர் ரெஸா நஜாஃபி இந்த தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படாது என்றும் அறிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |