துருக்கியில் தந்தை-மகன் விபத்தில் பலி! அயர்லாந்து சுற்றுலாப் பயணிகளுக்கு நேர்ந்த சோகம்
துருக்கி நாட்டில் அயர்லாந்தைச் சேர்ந்த தந்தை, மகன் சாலை விபத்தில் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாட்டிற்கு சுற்றுலா
அயர்லாந்தின் லாவோயிஸைச் சேர்ந்தவர் Eoin Fitzpatrick. இவர் தமது குடும்பத்துடன் துருக்கிக்கு சுற்றுலா மேற்கொண்டார்.
அங்கு கடலோர சுற்றுலா நகரமான அலன்யாவில் Eoin தன் மகன் Dyln (10) உடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, பேருந்து ஒன்றின் மீது மோதி விபத்தில் சிக்கியுள்ளனர்.
இதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சொந்த நாட்டிற்கு திரும்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்ததாக தெரிய வந்துள்ளது.
வெளியுறவுத்துறை உதவி
இதுகுறித்து அறிந்த வெளியுறவுத்துறை Eoin குடும்பத்திற்கு தூதரக உதவிகளை வழங்கியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் துருக்கியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த துயர சம்பவம் D-400 நெடுஞ்சாலையில் Eoin-னின் வாகனம் அலன்யாவில் இருந்து மெர்ஸின் நோக்கி சென்று கொண்டிருந்தபோது நடந்ததாக துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |