சுவீடன் நேட்டோவில் இணைவதற்கான தடை நீக்கம்! துருக்கி அதிபர் சம்மதம்
சுவீடன் நேட்டோவில் இணைய துருக்கி தடை விதித்திருந்த நிலையில் துருக்கி அதிபர் எர்டோகன் சம்மதம் தெரிவித்துள்ளார்.
நேட்டோவில் இணையும் சுவீடன்
உக்ரைன் நாடு மீது ரஷ்யா போர் தொடுத்ததில் இருந்து அண்டை நாடுகள் தங்களை நேட்டோவில் இணைக்க கவனம் செலுத்தி வருகின்றன. நேட்டோவில் உக்ரைன் இணைய முயற்சியில் ஈடுபட்டதே, ரஷ்யா தாக்குதல் நடத்துவதற்கு காரணம் என கூறப்பட்டது.
நேட்டோவில் இணைவதற்காக உக்ரைன் பல நாடுகளின் உதவியையும் நாடியது. தற்போது, துருக்கி அதிபர் எர்டோகன் ஆதரவு அளித்துள்ளார்.
CNN
இந்நிலையில், நேட்டோவில் இணைய சுவீடன் விண்ணப்பித்திருந்த நிலையில் துருக்கி தடை விதித்தது. குர்தீஸ் குழு, துருக்கி அரசுக்கு எதிரான ஆர்வலர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வந்ததால் நேட்டோவில் இணைய தடை விதித்தது.
சம்மதம் தெரிவித்த துருக்கி அதிபர்
நேட்டோ படையில் சுவீடன் இணைவதற்கான சம்மதத்தை துருக்கி அதிபர் எர்கோடன் நேற்று அறிவித்தார். இதற்காக நாடாளுமன்றத்தின் ஆதரவினை பெறுவதற்கும் அழுத்தம் கொடுப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
இது தொடர்பாக, ஜோன்ஸ் ஸ்டோல்டன்பெர்க் கூறுகையில்,"துருக்கியின் இந்த முடிவை வரலாற்று நாள் என்றும், நேட்டோவில் சுவீடன் இணைவது கூட்டணி நாடுகளின் இக்கட்டான சூழ்நிலைக்கு வலிமையை ஏற்படுத்தும் எனவும்" அவர் கூறியுள்ளார்.
US News
துருக்கி அதிபர் எர்டோகன், சுவீடன் பிரதமர் கிரிஸ்டர்சன், நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் சந்திப்பிற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |