நிலவின் தரையில் மோதி செயலிழந்த விண்கலம்: ஆசிய நாடொன்றின் விஞ்ஞானிகள் கூறிய தகவல்
ஜப்பானின் விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய விண்கலம் நிலவின் தரையில் மோதி செயலிழந்தது.
Resilience விண்கலம்
ஜப்பானின் தனியார் நிறுவனமான Ispace, நிலவின் வடக்கில் அமைந்துள்ள உறை கடல் என்னும் Mare Frigorisயில் தரையிறங்கும் இலக்குடன் விண்கலம் ஒன்றை அனுப்பியது.
ரெசிலியன்ஸ் (Resilience) என்ற அந்த விண்கலம் கடந்த ஜனவரி மாதம் நிலவிற்கு அனுப்பப்பட்டது.
ஆனால், ரெசிலியன்ஸ் மற்றும் அதன் உலவு கருவி ஆகியவை நிலவின் தரையில் விழுந்து நொறுங்கியது.
லேசர் கருவி
அதன் சிதறிய பாகங்களை நாசாவின் லூனார் விண்கலம், கடந்த வாரம் புகைப்படங்களாக எடுத்து அனுப்பியது.
இந்த நிலையில், ரெசிலியன்ஸ் விண்கலம் எப்படி விபத்திற்குள்ளானது என Ispace நிறுவன அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.
அவர்கள் கூறுகையில், "விண்கலத்தின் லேசர் கருவியின் செயலிழப்பே விபத்திற்குக் காரணம். லேசர் கருவி நிலவின் மேற்பரப்பு தூரத்தை துல்லியமாக அளவிட்டு கொடுக்காததால், வேகமாக சென்ற விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி விபத்திற்குள்ளானது" என தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |