இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் எப்போது அமுலுக்கு வரும்? முக்கிய நடவடிக்கைகளின் வரிசை
இஸ்ரேலிய அமைச்சரவையின் கூட்டத்திற்கு பிறகான 24 மணி நேரத்திற்குள் போர் நிறுத்தமானது அமுலுக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம்
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் நடைமுறைக்கு வரும் நேரம் குறித்து அந்நாட்டின் செய்தி தொடர்பாளர் ஷோஷ் பத்ரோசியான் தகவல் தெரிவித்துள்ளார்.
அதில், இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு 24 மணி நேரத்திற்குள் ஹமாஸ் உடனான போர் நிறுத்தமானது அமுலுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தகவலில், அமைச்சரவை கூடிய பிறகு ஹமாஸுடனான போர் நிறுத்தம் அமுலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
கையெழுத்தான முக்கிய ஒப்பந்தம்
எகிப்தில் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தமானது இன்று கையெழுத்தாகியுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
Give @realDonaldTrump the Nobel Peace Prize - he deserves it! 🏅 pic.twitter.com/Hbuc7kmPt1
— Prime Minister of Israel (@IsraeliPM) October 9, 2025
ஒப்பந்தத்தின் முக்கிய பகுதியாக, இஸ்ரேலிய ராணுவம் 24 மணி நேரத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட எல்லை பகுதிக்கு திரும்பிச் செல்லும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அதைப்போல, 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய ராணுவம் பின்வாங்கலை செய்த பிறகு, அடுத்த 72 மணி நேரத்தில் ஹமாஸ் பிடியில் மீதம் உள்ள இஸ்ரேலிய பிணைக் கைதிகள் இஸ்ரேலிடம் ஒப்படைக்கபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிணைக் கைதிகள் திரும்ப பெற்றவுடன், அவர்களுக்கான மருத்துவ உதவிகள் தயார் நிலையில் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |