இஸ்ரேல் ஹமாஸ் போர்: சரமாரியாக ராக்கெட் தாக்குதல் நிகழ்த்திய ஹிஸ்புல்லா
இஸ்ரேல் வசமிருக்கும் பகுதி ஒன்றின்மீது லெபனானை மையமாகக் கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சரமாரியாக ராக்கெட் தாக்குதல் நிகழ்த்திய ஹிஸ்புல்லா
இஸ்ரேல் கட்டுப்பாட்டிலிருக்கும் கோலன் குன்றுகள் மீது லெபனானை மையமாகக் கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட் தாக்குதல் நிகழ்த்தியுள்ளது.
50க்கும் மேற்பட்ட ராக்கெட்கள் சரமாரியாக வீசப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலில், 30 வயது நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். ஒரு வீடு தீப்பற்றியுள்ளது. எரிவாயுக் கசிவு ஒன்றைத் தடுத்ததன் மூலம், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது.
செவ்வாயன்று இரவு, இஸ்ரேல் லெபனானுக்குள் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், 19 பேர் காயமடைந்ததாகவும் தெரிவித்துள்ள ஹிஸ்புல்லா அமைப்பு, அதற்கு பதிலடியாகவே இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
1967ஆம் ஆண்டு நடந்த போர் ஒன்றின்போது, சிரியாவிடமிருந்து இஸ்ரேல் கைப்பற்றிய பகுதியே கோலன் குன்றுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |