பிடிபட்ட ஹமாஸ் போராளிக்குழுவினருக்கு சிகிச்சை அளிக்க வேண்டாம்! இஸ்ரேல் சுகாதார அமைச்சர்
இஸ்ரேலில் உள்ள மருத்துவமனைகளில் பிடிபட்ட ஹமாஸ் படையினருக்கு சிகிச்சை அளிப்பதை விட, பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் என அந்நாட்டு சுகாதார அமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
1,200 பேர் பலி
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கு இடையே நடந்து வரும் சண்டையில் இதுவரை 1,200 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
காயமடைந்த ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இஸ்ரேலிடம் பிடிபட்ட ஹமாஸ் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டாம் என அந்நாட்டு சுகாதார அமைச்சர் மோஷி அர்பெல் (Moshe Arbel) பொது மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதற்கு பதிலாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் IDF வீரர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் முழுமையாக கவனம் செலுத்துமாறு அவர் கூறியுள்ளார்.
சுகாதார அமைச்சர் உத்தரவு
ஜெருசலேம் போஸ்ட்டின் படி மோஷி அர்பெல் தனது உத்தரவில், 'சண்டை தொடங்கியதில் இருந்து கேவலமான மற்றும் இழிவான ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு பொது மருத்துவமனைகளுக்குள் சிகிச்சை அளிப்பது சுகாதார அமைப்பில் பெரும் சிக்கலைக் குவித்துள்ளது.
இந்த கடினமான களங்களில் குற்றப் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்கள், IDF வீரர்கள் மற்றும் அடுத்தகட்டத்திற்கு தயார்படுத்துதல் ஆகியவற்றில் சுகாதார அமைப்பு முழுமையாக கவனம் செலுத்த வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொது சுகாதார அமைப்பிற்குள் சபிக்கப்பட்ட மற்றும் வெறுக்கத்தக்க பயங்கரவாதிகளைப் பாதுகாத்து, சிகிச்சை அளிப்பதற்கான பணி இந்த முயற்சிகளை கணிசமாக பாதிக்கிறது, எனவே எனது வழிகாட்டுதலின் கீழ் பொது சுகாதார அமைப்பு அவர்களுக்கு சிகிச்சை அளிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உத்தரவினைத் தொடர்ந்து, டெல் அவிவில் உள்ள சௌராஸ்கி மருத்துவ மையம் அங்கு கொண்டுவரப்பட்ட ஹமாஸைச் சேர்ந்த ஒருவர், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படவில்லை என அறிவித்தது.
அதற்கு பதிலாக அவர் மருத்துவ சிகிச்சைக்காக ராம்லேயில் உள்ள சிறை சேவையின் கிளினிக் ஒன்றுக்கு அனுப்பப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |