காசாவிற்குள் புகுந்து 4 பணயக்கைதிகளை மீட்ட இஸ்ரேல்: வெளியான முக்கிய தகவல்
பணயக்கைதிகள் நான்கு பேரை காசாவில் இருந்து பத்திரமாக மீட்டு இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஹமாஸால் கடத்தப்பட்ட பணயக்கைதிகள்
கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியை குறிவைத்து ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதலை முன்னெடுத்தனர்.
அப்போது இந்த நோவா இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நோவா ஆர்கமணி (25), அல்மோக் மீர் ஜான் (21), ஆண்ட்ரே கோஸ்லோவ் (27), மற்றும் ஷ்லோமி ஜிவ் (40) உட்பட நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக ஹமாஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டனர்.
இவற்றில் பாதிக்கும் மேற்பட்டோர் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
பத்திரமாக மீட்கப்பட்ட பணய கைதிகள்
தற்போது காசாவில் ஹமாஸ் அமைப்புடன் தீவிரமான சண்டை நடைபெற்று வரும் நிலையில், காசாவில் இருந்து மேலே கூறப்பட்டுள்ள நான்கு பேரையும் இஸ்ரேல் பத்திரமாக மீட்டுள்ளது.
IDF, ISA, மற்றும் Yamam படைகளால் நுசிராட்டின் (Nuseirat)மையத்தில் உள்ள இரண்டு வெவ்வேறு இடங்களில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த இந்த நான்கு பணயக்கைதிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மீட்கப்பட்ட 4 பேரும் நல்ல உடல் தகுதியுடன் இருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மீதமுள்ள பணயக்கைதிகளையும் வீட்டிற்கு அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |