காசாவில் பள்ளி மீது இஸ்ரேல் தாக்குதல்: 30 பொதுமக்கள் உயிரிழப்பு
காசாவில் உள்ள பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய திடீர் தாக்குதலில் 30 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
பள்ளி மீது தாக்குதல்
இடம்பெயர்ந்த பாலஸ்தீன மக்கள் தங்கியிருந்த மத்திய காசாவின் டெய்ர் அல் பலாவில் உள்ள கதீஜா பெண்கள் பள்ளி மீது இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த வான்வழித் தாக்குதலில் 30 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அத்துடன் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Reuters
காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள அல் அக்சா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
இஸ்ரேல் குற்றச்சாட்டு
இந்நிலையில் ஹமாஸின் கட்டளை இருப்பிடங்களை குறிவைத்தே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இஸ்ரேலிய படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தவும், ஆயுத கிடங்குகளாவும், ஹமாஸ் அமைப்பினர் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.
Reuters
மேலும் தாக்குதலுக்கு முன்னதாக அங்கிருந்த பொதுமக்களை எச்சரித்ததாகவும் இஸ்ரேலிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |