பாகிஸ்தானில் இஸ்லாமிய கட்சி தலைவர் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் - அதிர்ச்சி வீடியோ
பாகிஸ்தானில் இஸ்லாமிய கட்சி தலைவர் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலால் பெரும் பதற்றமும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் தற்கொலைப் படைத் தாக்குதல்
பாகிஸ்தானில் சிராஜுல் ஹக் என்பவர் இஸ்லாமிய அரசியல் கட்சித் தலைவராக உள்ளார்.
இவர் பலுசிஸ்தானில் உள்ள சோப் என்ற பகுதியில் நடக்க விருந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக காரில் சென்றுக்கொண்டிருக்கிறார். அப்போது, காரில் வந்துக்கொண்டிருந்த அவர் மீது திடீரென தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலில் தலைவர் சிராஜுல் ஹக் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால், இத்தாக்குதலில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
உடனே, இது குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற பொலிசார் காயம் அடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
தற்போது மருத்துவமனையில் காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், 4 பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத் தற்கொலை தாக்குதலுக்கு இந்த தற்கொலை தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரித்துள்ளார். இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Quetta Blast Video on, Jamat e Islami Siraj ul Haq Today,
— Shahtaj Bhutto ? (@shahtajahmedbh1) May 19, 2023
Jamaat-i-Islami leader #SirajulHaq #quetta #blast #video #latest #today #pak #Pakistan #ImranKhan #ImranKhanPTI pic.twitter.com/eT40kSRKWH