ஜம்மு காஷ்மீரில் பொலிஸ்-ராணுவ வீரர்கள் இடையே மோதல்
ஜம்மு காஷ்மீரில் ராணுவம் மற்றும் காவல்துறையினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவரை போதைப்பொருள் வழக்கில் விசாரித்ததால் ஆத்திரமடைந்த ராணுவ வீரர்கள் சிலர் காவல் நிலையம் மீது தாக்குதல் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர்.
குப்வாரா (Kupwara) காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இச்சம்பவம் நடந்துள்ளது.
மூன்று ராணுவ லெப்டினன்ட் கர்னல்கள் உட்பட 13 ஜவான்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மூன்று மூத்த இராணுவ அதிகாரிகளின் தலைமையில் 160 பிராந்திய இராணுவத்தின் ஆயுதமேந்திய சில ஜவான்கள் பொலிஸ் நிலையத்திற்கு வந்து அங்கு கடமையில் இருந்த பொலிசார் மீது தாக்குதல் நடத்தினர்.
அங்கிருந்த பொலிஸ்காரர் ஒருவர் கடத்தப்பட்டார். இந்த காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.
பொலிஸ் நிலையத்துக்கு வந்த மூத்த பொலிஸ் அதிகாரிகள் ராணுவ வீரர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
எவ்வாறாயினும், பொலிஸ் நிலையத்தின் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதில் உண்மையில்லை என இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Police Army Clash, Jammu and Kashmir, Kupwara Police Station incident