ஜப்பானை உலுக்கிய மிகப்பெரிய நிலநடுக்கம்: 62-ஆக அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
ஜப்பானில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்க பாதிப்பில் இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜப்பானில் நிலநடுக்கம்
ஜப்பானின் இஷிகாவா மற்றும் அதனை சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளில் ஜனவரி 1ம் திகதி புத்தாண்டு தினத்தன்று 7.5 ரிக்டர் அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கம் பதிவானது.
இதனை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள கடற்கரை பகுதிகளுக்கு 5 மீட்டர் உயரத்திற்கு சுனாமி அலைகள் ஏற்படலாம் என்று அவசர எச்சரிக்கை கொடுக்கப்பட்டது.
Drone video shows the damage after a deadly 7.6 magnitude earthquake on Japan's western coast. At least 55 people were killed. pic.twitter.com/gbWveRVQ09
— AccuWeather (@accuweather) January 2, 2024
ஆனால் பின்னர் இந்த சுனாமி எச்சரிக்கை பின் வாங்கி கொள்ளப்பட்ட நிலையில், அன்று ஒருநாளில் மட்டும் 155 நிலநடுக்கங்கள் ஜப்பானில் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் பலியானோர் எண்ணிக்கை
இந்நிலையில் ஜப்பானில் ஏற்பட்ட அடுத்தடுத்த நிலநடுக்க பாதிப்புகளில் சிக்கி இதுவரை 62 பேர் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரும்பாலான உயிரிழப்பு Wajima மற்றும் Suzu ஆகிய பகுதிகளில் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுளது.
AP
மேலும் 20 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், இன்னும் பல கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்றும் அதிகாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானில் ஏற்பட்டுள்ள இந்த மிகப்பெரிய நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன, சாலைகளில் விரிசல் விழுந்துள்ளன, மீன் பிடி படகுகள் கடல் நீரில் மூழ்கியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Japan, Earthquakes, Wajima, Kyodo news, tsunami, tsunami waves, Ishikawa, Ishikawa, Honshu, 7.5-magnitude quake