ஜப்பானில் திடீரென ரத்த நிறத்தில் மாறிய நதி நீர்: ஷாக்கான மக்கள்
ஜப்பானில் நதி நீர் திடீரென ரத்த நிறத்தில் மாறியதைப் பார்த்த மக்கள் பயங்கரமாக அதிர்ச்சி அடைந்தனர்.
ரத்த நிறத்தில் மாறிய நதி நீர்
ஜப்பான், ஒகினாவா மாகாணத்தில் உள்ள நாகோ நகர நதி பாய்ந்து செல்கிறது. இந்த நதி திடீரென்று இன்று அடர் ரத்த சிவப்பு நிறத்தில் மாறியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
உடனடியாக இது குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த பொலிசார் இந்த நதியைப் பார்வையிட்டு அடுத்த கட்ட விசாரணையை மேற்கொண்டனர்.
@chimran55
அப்போது, இந்த நதிக்கு அருகில் ஒரு மதுபான ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான ஆலையில் குளிரூட்டும் அமைப்பு ஒன்றில் புரோபிலீன் கிளைகோல் எனப்படும் உணவு சேர்க்கைக்கான பொருள் வைக்கப்பட்டிருந்தது. இந்த பொருளின் சாயம் கசிந்து நதியில் கலந்துள்ளதாக தெரியவந்தது.
இது குறித்து அந்த மதுபான ஆலை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், உணவு பொருளின் நிறத்தில் சேர்க்கப்படும் சாயம் ஆற்றில் கசிந்ததால் தண்ணீர் இப்படி சிவப்பு நிறமாக மாறியதாகவும், இதனால் சுகாதார அபாயங்கள் கிடையாது என்றும், இச்செயலுக்காக மன்னிப்பு கேட்டு அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது.
இதனையடுத்து, இது போன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
#Japanese river turns blood red, alarming residents
— CHAUDHRY IMRAN (@chimran55) June 29, 2023
A food colouring leak in a port in #Japan left a flowing river blood red in #colour alarming residents about the #mysterious change.
Visuals of the river in #Nago city in #Japan Okinawa showed that the water had turned deep red… pic.twitter.com/wQNH6863EC
Residents of a resort city in Okinawa, Japan woke up Tuesday to find an area of usually clear blue water had turned red.
— Bloomberg Quicktake (@Quicktake) June 29, 2023
The culprit was a beer plant leak, where a coolant used to regulate the temperature of brewing equipment flowed into a nearby river https://t.co/rRGlSjIeuM pic.twitter.com/7CldhCq3Yw
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |