2 மகன்களை காப்பாற்ற அணை நீரில் குதித்த அப்பாவும் பலி! ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு பண்டிகை நாளில் நேர்ந்த சோகம்
பாகிஸ்தானில் அணையில் மூழ்கிய தனது மகன்களை முயன்ற நீதிபதி மற்றும் மைத்துனர் உட்பட 4 பேரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அணை நீரில் தத்தளித்த மகன்கள்
பாகிஸ்தானின் சோஹாவா தெஹ்சிலில் அமைந்துள்ள ராஜா காலித் அணைக்கு நீதிபதியான ராஜா மொபீன் கயானி, தனது 2 மகன்கள் மற்றும் மைத்துனருடன் ஈத் பண்டிகை நாளில் சென்றுள்ளார்.
அணை நீரில் குளிக்கும்போது அவரது மகன்களான அப்துல்லா, சாத் இருவரும் நீச்சல் தெரியமால் தத்தளித்துள்ளனர்.
இதனை கவனித்த மொபீன் கயானியும், மைத்துனர் அமீரும் அவர்களை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்களும் நீரில் மூழ்கினர்.
Photo via author
நான்கு பேர் மரணம்
இறுதியில் நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நான்கு பேரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த துயர சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்பதற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
PTI
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |