உலகின் மிக வெப்பமான ஜூலை மாதம்! நாசா நிபுணர்கள் வெளியிட்ட பீதியை ஏற்படுத்தும் தகவல்
பல நூறு ஆண்டுகளுக்கு பின்னர், இந்த ஜூலை மாதம் உலகின் மிக வெப்பமான மாதமாக இருக்கும் என நாசா நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வெப்ப அலையின் ஆபத்து மண்டலத்தில்
ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் சீனாவில் வெப்ப அலை நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வருகிறது. மட்டுமின்றி, மில்லியன் கணக்கான அமெரிக்க மக்கள் வெப்ப அலையின் ஆபத்து மண்டலத்தில் குடியிருந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
@getty
இது மரணத்திற்கு வழிவகுக்கும் எனவும் நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது 89.8 மில்லியன் மக்கள் தற்போது ஆபத்து கட்டத்தில் உள்ளனர். இவர்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் மற்றும் மரணம் கூட ஏற்படும் ஆபத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்காவில் சுமார் 70 நகரங்கள் ஆபத்தான மண்டலத்தில் உள்ளது. இப்பகுதியில் வெப்பநிலை தொடர்ந்து 40C எனவே பதிவாகி வருகிறது. வெப்பநிலை 26.6 முதல் 32.2C என பதிவாகும் பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், வெப்பநிலை 32.2-39.4 என பதிவாகும் பகுதியில் வசிக்கும் மக்கள் ஒரு தீவிர எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தியுள்ளனர். மேலும் 39 முதல் 51 வரையில் வெப்பநிலை பதிவாகும் பகுதியில் வசிக்கும் மக்கள், ஆபத்தான மண்டலத்தில் குடியிருப்பதாக கருத்தில் கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
கடுமையான வெப்பம் மிகுந்த மாதம்
வெப்ப அலையால் ஒவ்வொரு கோடை காலத்திலும் நூற்றுக்கணக்கான மக்கள் அமெரிக்காவில் மரணமடைகின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள இந்த தீவிர வெப்ப அலைக்கு மக்கள் நிறைய தண்ணீர் குடிக்க்கவும் வெயிலில் இருந்து விலகி இருக்கவும், முடிந்தவரை குளிரான அறைகளில் தங்குவதை தெரிவு செய்ய வேண்டும் என அதிகாரிகள் தரப்பு அறிவுறுத்தியுள்ளது.
@getty
இந்த நிலையில் தான், ஜூலை மாதம் மிகக் கடுமையான வெப்பம் மிகுந்த மாதாமாக இருக்கும் என நாசா நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 2022 கோடையில் ஐரோப்பாவில் மட்டும் வெப்ப அலைக்கு 61,000 இறப்புகள் பதிவாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |