தமிழகத்தை உலுக்கிய கலாஷேத்ரா விவகாரம்: பேராசிரியர் ஹரி பத்மன் ஜாமீனில் விடுதலை
சென்னை கலைக் கல்லூரியான கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஹரி பத்மனுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஆசிரியர்
சென்னையில் உள்ள பிரபலமான கலை கல்லூரியான கலாஷேத்ராவில் பேராசிரியர்கள் சிலர் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி அங்கு பயிலும் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சர்ச்சைக்குரிய ஆசிரியர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வலுக்கத் தொடங்கியது.
இது தொடர்பாக விசாரணையை தொடங்கிய தமிழக பொலிஸார், ஏப்ரல் 3ம் திகதி தலைமறைவாக இருந்த பேராசிரியர் ஹரிபத்மனை சென்னை மாதவரத்தில் உள்ள அவரது தோழி வீட்டில் வைத்து அதிரடியாக கைது செய்தனர்.
ஜாமீன் வழங்கி உத்தரவு
இந்நிலையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பாக விசாரணை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த விசாரணையின் போது கலை கல்லூரியான கலாஷேத்ராவில் பணிபுரிந்த பேராசிரியர் ஹரி பத்மனுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.