கமலா ஹாரிஸ் ஜனாதிபதி... 2009ல் பிரபலம் ஒருவரின் ஆருடம்: கவனம் ஈர்க்கும் பதிவு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் உத்தியோகப்பூர்வ வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்திய பிரபலம் ஒருவரின் கணிப்பு தற்போது கவனத்தை ஈர்த்து வருகிறது.
அரசியல்வாதியாக சாதிப்பது
அமெரிக்க ஜனாதிபதி தெர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஜனநாயகக் கட்சி உத்தியோகப்பூர்வமாக தங்கள் வேட்பாளரை அறிவித்துள்ளது. வெளிவரும் தரவுகளின் அடிப்படையில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் பல மாகாணங்களில் கடுமையான போட்டியை முன்னெடுப்பார் என்றே கூறப்படுகிறது.
Having fun at a fancy event with a woman who they say could be US President, Kamala Harris. Chicks rule!
— Mallika Sherawat (@mallikasherawat) June 23, 2009
இருவரும் போட்டி நிறைந்த மாகாணங்களில் சில புள்ளிகள் வித்தியாசத்திலேயே முன்னிலையில் உள்ளனர். இந்த நிலையில், இந்தி திரையுலக பிரபலம் மல்லிகா ஷெராவத் தமது சமூக ஊடக பக்கத்தில் 2009ல் பதிவிட்டுள்ள கருத்து தற்போது கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்தியாவில் இருந்து குடியேறிய ஒருவர், அதுவும் பெண் அரசியல்வாதியாக சாதிப்பது என்பது அரிதான விடயம் என குறிப்பிட்டுள்ள ஷெராவத், தாம் இங்கு சந்தித்துள்ள ஒரு பெண் அரசியல்வாதி தாம் கட்டியெழுப்பியுள்ள அனைத்தையும், தனியொருவராக முன்னெடுத்துள்ளார் என குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்க ஜனாதிபதியாக
2009ல் நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ள ஷெராவத், அங்குள்ள மக்கள் கமலா ஹாரிஸ் தொடர்பில் நன்மதிப்பை வைத்திருந்ததாகவும், ஒரு நாளில் அவர் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்புக்கு வருவார் என அந்த மக்கள் நம்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ஷெராவத் அப்போது பதிவு செய்துள்ள இந்த கருத்து, தற்போது சமூக ஊடகங்களில் தீயாக பரவி வருகிறது. 2011ல் வெளியான Politics of Love என்ற திரைப்படத்தில் நடிக்கும் போதே ஹாரிஸ் மற்றும் ஷெராவத் சந்திப்பு நடந்துள்ளது.
2009ல் ஹாரிஸுக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றிலும் ஷெராவத் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |