இரண்டாக வெடித்து சிதறிய விமானம்! கஜகஸ்தான் விமான விபத்தில் சிக்கியவர்கள் விபரம்
கஜகஸ்தான் நாட்டில் விமான விபத்தில் சிக்கியவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விபரம் தெரிய வந்துள்ளது.
வெடித்து சிதறிய விமானம்
அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான Embraer-190 என்ற விமானம், கஜகஸ்தானில் விமான நிலையம் அருகே விபத்திற்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
க்ரோஸ்னி நோக்கி சென்றுகொண்டிருந்த விமானம், கடும் பனிமூட்டம் மற்றும் மோசமான வானிலை காரணங்களால் தரையிறக்க அனுமதி மறுக்கப்பட்டது.
பின்னர் விமானம் திருப்பி விடப்பட்ட நிலையில், நடுவானில் சென்றுகொண்டிருந்த விமானத்தின் மீது பறவைகள் மோதியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
38 பேர் பலி
இந்த விபத்தில் 42 பேர் பலியானதாக கூறப்பட்ட நிலையில், தற்போது 38 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும் விமானத்தில் பயணித்த 67 பேரில் 42 பேர் அஜர்பைஜானைச் சேர்ந்தவர்கள், 16 பேர் ரஷ்யர்கள், 6 பேர் கஜகஸ்தானைச் சேர்ந்தவர்கள் மற்றும் மூவர் கிர்கிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |