பொலிஸ் அதிகாரியின் முகத்தில் குத்திய நெதர்லாந்து நாட்டவர்: 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த ரஷ்யா
ரஷ்ய பொலிஸ் அதிகாரியை தாக்கிய நெதர்லாந்து நாட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தள்ளிவிட்ட நெதர்லாந்து நபர்
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஹாரி ஜோஹன்னஸ் வான் ஹுர்டன் என்ற நபர் ரஷ்யாவில் வசித்து வந்தார்.
இவருக்கும் ரஷ்ய பொலிஸ் அதிகாரி ஒருவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் வாக்குவாதம் ஏற்பட்டது.
ஹாரி போக்குவரத்துக்கு சிக்னலுக்கு வைக்கப்பட்ட பலகையை உடைத்துள்ளார். இதனால் குறித்த அதிகாரி கேள்வி கேட்டபோது, ஹாரி அவரை கீழே தள்ளிவிட்டார்.
சிறை தண்டனை
மேலும் அவரது முகத்தில் குத்தியதால் கைது செய்யப்பட்ட ஹாரி, மாஸ்கோவில் வீட்டு காவலில் வைக்கப்பட்டார்.
அவர் மீதான விசாரணைக்குப் பிறகு, ரஷ்ய நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பால் ரஷ்யா, நெதர்லாந்து நாடுகளுக்கு இடையேயான உறவில் சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |