இந்த நாட்டவர்களுக்கு இனி விசா தேவையில்லை... அறிவித்த கென்ய ஜனாதிபதி
அனைத்து ஆப்பிரிக்க பயணிகளுக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் விசா தேவைகளை முடிவுக்கு கொண்டுவர கென்யா முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ தெரிவித்துள்ளார்.
விசா கட்டுப்பாடுகள்
ஆப்பிரிக்க நாடுகளுக்குள் விசா கட்டுப்பாடுகள் இருப்பது என்பது நாமே நமது மக்களுக்கு எதிராக செயல்படுவது போன்றது என்று சர்வதேச மாநாடு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்பிரிக்க கண்டத்திற்குள் விசா இல்லாத பயணம் கடந்த பத்தாண்டுகளாக ஆப்பிரிக்க ஒன்றியத்தின் (AU) இலக்காக உள்ளது. இதுவரை சீஷெல்ஸ், காம்பியா மற்றும் பெனின் ஆகிய நாடுகள் மட்டுமே அனைத்து ஆப்பிரிக்க குடிமக்களுக்கும் விசா இல்லாத பயணத்தை அனுமதிக்கிறன.
ஆப்பிரிக்க ஒன்றியத்தில் உள்ள 54 நடுகளில் கென்யா 31வது இடத்தில் உள்ளது. விசா கட்டுப்பாடுகளால் நாம் பொருளாதார வாய்ப்புகளை இழக்கிறோம் என்று தெரிவித்துள்ளார் ஜனாதிபதி ரூட்டோ.
இதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் இனி ஆப்பிரிக்க மக்கள் கென்யாவுக்கு பயணிக்க விசா கட்டுப்பாடுகள் இருக்காது என்றார். ஆப்பிரிக்க மக்கள் ஐரோப்பிய எல்லைகளில் காத்துக்கிடப்பதோ ஆப்பிரிக்க எல்லைகளில் காத்துக்கிடப்பதோ கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆவணங்கள் ஏதுமின்றி
2016ல் ஆப்பிரிக்க ஒன்றியம் பொதுவான கடவுச்சீட்டு ஒன்றை அமுலுக்கு கொண்டுவந்தது. அதாவது ஆப்பிரிக்க மக்கள் விசா ஆவணங்கள் ஏதுமின்றி, 54 நாடுகளுக்கும் பயணிக்கலாம்.
ஆனால் உள்ளூர் காரணங்களால் பல நாடுகள் இதுவரை அந்த திட்டத்தை அமுலுக்கு கொண்டுவரவில்லை என்றே கூறப்படுகிறது.
குறிப்பாக பாதுகாப்பு அச்சுறுத்தல், உள்ளூர் சந்தைகளில் ஏற்படக் கூடிய தாக்க்ம் மற்றும் கடத்தல் உள்ளிட்ட காரணிகளை பல அரசாங்கங்கள் சுட்டிக்காட்டின.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |