Visit விசாவில் அமீரகத்திற்கு சென்ற இந்தியருக்கு பறிபோன பார்வை! அவருக்கு கண்டறியப்பட்ட பாதிப்பு
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வேலைக்காக சென்ற இந்திய நபருக்கு, கண் பார்வை பாதிப்பு ஏற்பட்டு பின் நாடு திரும்பியது சோகத்தை ஏற்படுத்தியது.
வேலை வாய்ப்புக்காக சென்ற இந்தியர்
இந்திய மாநிலம் கேரளாவைச் சேர்ந்தவர் சுனில். இவர் 2022ஆம் ஆண்டில் Visit விசாவில் வேலை வாய்ப்புக்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றார்.
அங்கு அவருக்கு வேலை கிடைக்காத நிலையில், அவரது Visit விசா காலாவதியானது. அதே சமயம் அவருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டு, ஒரு கண்ணில் பார்வையை இழந்தார்.
இந்திய தூதரகத்தின் உதவி
பின்னர் அபுதாபியில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியை சுனில் நாடினார். ஆவணங்களை சரிபார்த்த பிறகு அவர் இந்தியாவுக்கு திரும்ப அனுமதிக்கும் வகையில் விமான டிக்கெட் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த 9ஆம் திகதி சுனில் கேரளாவுக்கு திரும்பினார். கலீஜ் டைம்ஸின் அறிக்கையின்படி, கண்ணில் உள்ள பார்வை நரம்பை பாதிக்கும் நோயான 'Glaucoma'-வினால் சுனில் பாதிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |