ரயிலில் சீனாவுக்கு வந்த கிம்! சர்வதேச அளவில் எதிர்பார்க்கும் புடின், ஜின்பிங் உடனான சந்திப்பு
பெய்ஜிங்கில் நடைபெறும் பிரம்மாண்ட அணிவகுப்பில் கலந்துகொள்ள வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சீனா வந்தடைந்தார்.
இராணுவ அணிவகுப்பு
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து 80 ஆண்டுகள் ஆன நிலையில், ஜப்பானுக்கு எதிரான சீனாவின் போரைக் குறிக்கும் வகையில் பெய்ஜிங்கில் இராணுவ அணிவகுப்பு நடைபெற உள்ளது.
இதில் கலந்துகொள்ள விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் (Kim Jong Un) சீனாவுக்கு வருகை தந்துள்ளார். அவர் கவச ரயிலில் பயணம் செய்து சீனாவை வந்தடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பில் 26 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். அவர்களில் ஜி ஜின்பிங், புடின் உடன் கிம் இந்நிகழ்வை காண்பார்.
14 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த பிறகு, ஒரு பெரிய சர்வதேச கூட்டத்தில் கிம் ஜாங் உன் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.
சர்வதேச அளவில் சக்தி வாய்ந்த மூன்று நாடுகளின் (சீனா, ரஷ்யா, வடகொரியா) தலைவர்களான ஜி ஜின்பிங், விளாடிமிர் புடின் மற்றும் கிம் ஜாங் உன் ஆகிய மூவரும் சந்திப்பை நடத்த உள்ளது பாரிய எதிர்பார்ப்பில் உள்ளது.
தனிப்பட்ட முறையில் சிந்திப்பார்களா
அதே சமயம் மூன்று தலைவர்களும் இந்த விஜயத்தின்போது தனிப்பட்ட முறையில் சிந்திப்பார்களா என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.
இதற்கிடையில், கிரெம்ளினின் உதவியாளர் யூரி உஷாகோவ் TASS செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, புடின் மற்றும் கிம் இடையிலான சந்திப்பு பரிசீலனையில் உள்ளது என்றார்.
மேலும் கிம் தனிப்பட்ட முறையில் ஜின்பிங்கை சந்திப்பார் அல்லது இரண்டு தலைவர்களுடனும் மும்முனை சந்திப்பை நடத்துவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதற்கு காரணம் தலைவர்கள் மூவரும் இதற்கு முன்பு நேரடி பேச்சுவார்த்தை நடத்தியிருந்தாலும், ஒருபோதும் முத்தரப்பு சந்திப்பு நடத்தவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |